/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போடி பஸ் ஸ்டாண்ட் வாகன காப்பகம் ரூ.10.10 லட்சத்திற்கு ஏலம் சிண்டிகேட் அமையாததால் மூன்று மடங்கு உயர்வு

ADDED : பிப் 09, 2024 07:06 AM
போடி: போடி நகராட்சி பஸ்ஸ்டாண்டில் வாகன காப்பகத்தில் கட்டண வசூல் செய்யும் உரிமைக்கான ஏலம் கடந்த முறையைவிட 3 மடங்கு அதிகரித்து ரூ. 10.10 லட்சத்திற்கு ஏலம் போனது.
போடி நகராட்சி பஸ்ஸ்டாண்டில் வாகன காப்பகத்தில் கட்டண வசூல், சுகாதார வளாகம், பேருந்து நுழைவு கட்டண வசூல், பொருட்கள் பாதுகாப்பு அறை, ஆடுவதை கூடம், நகராட்சி தலைமை நீரேற்று நிலைய கழிவுநீர் உபயோகிப்பதற்கு 3 ஆண்டுகளுக்கான உரிமம் ஆகியவற்றிற்கு ஏலம் நகராட்சி அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. ஏலத்தில்ஒவ்வொரு இனங்களுக்கும் டெபாசிட் தனி தனியாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தன. ஏலம் எடுத்த தொகைக்கு 18 சதவீதம் சேவை வரியும், அதற்கான தொழில் வரி செலுத்த வேண்டும் என நகராட்சி அறிவித்திருந்தது.
இதற்கான ஏலம் கமிஷனர் ராஜலட்சுமி தலைமையில் நடந்தது. மேலாளர் முனிராஜ், வருவாய் ஆய்வாளர்கள் ராஜ்கபூர், ராஜா, உதவி வருவாய் அலுவலர் ஜலாலுதீன் முன்னிலை வகித்தனர்.
கடந்த முறை வாகன காப்பகம் ரூ 3.70 லட்சத்திற்கு ஏலம் போனது. இந்த ஆண்டு ஏலத்திற்கு முன் நகராட்சி வளாகத்தில் ஏலத்தில் பங்கேற்க வந்தோர் சிண்டிகேட் அமைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் பலரும் ஏலத்தில் கலந்து கொண்டனர். ஏலத்தில் அதிகபட்சமாக ரூ.7.57 லட்சம்வரை ஏலம் கேட்டனர். பின்னர் டெண்டர் திறக்கப்பட்டதில் ரூ. 10.10 லட்சத்திற்கு கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஏலம் கோரியதால் உறுதிசெய்யப்பட்டது.
ஆடுவதை கூடம் ரூ. 3.97 லட்சம், சுகாதார வளாகம் ரூ. 8.61 லட்சம், பஸ் நுழைவு கட்டணம் வசூல் ரூ. 2 .95 லட்சம், பொருட்கள் பாதுகாப்பு அறை ரூ.29 ஆயிரமும், கழிவுநீர் உபயோகித்தல் ரூ. 30 ஆயிரத்திற்கும் ஏலம் போனது.
வாகன காப்பகம் கூடுதல் தொகைக்கு ஏலம் போனதால் ஏலத்தில் பங்கேற்ற பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.