/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பா.ஜ., சட்டசபை தொகுதி பொறுப்பாளர்களை மாற்ற ஆலோசனை
/
பா.ஜ., சட்டசபை தொகுதி பொறுப்பாளர்களை மாற்ற ஆலோசனை
பா.ஜ., சட்டசபை தொகுதி பொறுப்பாளர்களை மாற்ற ஆலோசனை
பா.ஜ., சட்டசபை தொகுதி பொறுப்பாளர்களை மாற்ற ஆலோசனை
ADDED : டிச 14, 2025 06:00 AM
தேனி: சட்டசபை தொகுதி வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள், அமைப்பாளர்களை மாற்றம் செய்ய பா.ஜ., ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடக்கிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் களப்பணியை தீவிரப்படுத்தி உள்ளன. பா.ஜ., சார்பில் அக்டோபரில் ஒவ்வொரு சட்டசபையில் நடந்து வரும் தேர்தல் பணிகளை கண்காணிக்க தலா ஒரு பொறுப்பாளர், அமைப்பாளர், இணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் தலைமையில் தொகுதி பிரச்னைகள் கணக்கெடுப்பு, பூத் கமிட்டி கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நியமிக்கப்பட்ட நிர்வாகிளை மாற்ற ஆலோசித்து வருவதாக நிர்வாகிகள் சிலர் கூறினர். அவர்கள் கூறியதாவது: தமிழகத்தில் பா.ஜ., வெற்றி பெறக்கூடிய தொகுதிகள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், சட்டசபை பொறுப்பாளர், அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் இத்தேர்தலில் போட்டியிட முடியாது என தெரிவித்துள்ளனர். ஆனால், பல நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட விரும்பம் தெரிவித்து வருகின்றனர். இதனால் சில தொகுதிகளில் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள், அமைப்பாளர், இணை அமைப்பாளர்களை மாற்றம் செய்ய கட்சி தலைமை ஆலோசித்து வருகிறது என்றனர்.

