/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குமுளியில் இருந்து சிறப்பு பஸ்கள் ஐயப்ப பக்தர்கள் வலியுறுத்தல்
/
குமுளியில் இருந்து சிறப்பு பஸ்கள் ஐயப்ப பக்தர்கள் வலியுறுத்தல்
குமுளியில் இருந்து சிறப்பு பஸ்கள் ஐயப்ப பக்தர்கள் வலியுறுத்தல்
குமுளியில் இருந்து சிறப்பு பஸ்கள் ஐயப்ப பக்தர்கள் வலியுறுத்தல்
ADDED : மார் 11, 2024 06:59 AM
கூடலுார்: 'ஒவ்வொரு தமிழ் மாத துவக்கத்திலும் தமிழக கேரள எல்லையான குமுளியில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும்.' என, ஐயப்ப பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் கேரளாவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு சென்று வருவது வழக்கம். இது தவிர சித்திரையிலும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். பக்தர்கள் அதிகமாக தேனி மாவட்டம் குமுளி வழியாக சென்று வருவர். இந்த நேரத்தில் கேரள போக்குவரத்து கழகம் சார்பில் குமுளியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இது தவிர தமிழகத்தில் இருந்தும் சிறப்பு பஸ்கள் குமுளி வரை இயக்கப்படும்.
இந்த சீசன் தவிர அனைத்து தமிழ் மாதங்களின் முதல் ஐந்து நாட்கள் சபரிமலையில் நடை திறக்கப்படுவது வழக்கம். கடந்த சபரிமலை உற்ஸவ காலத்தில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்ததால் பல்வேறு பகுதிகளில் இருந்து சபரிமலைக்கு வந்த பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் திரும்பினர். இதன் காரணமாக தற்போது தமிழ் மாதத்தின் முதல் ஐந்து நாட்கள் நடை திறக்கும் போது பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குமுளி வரை வரும் ஐயப்ப பக்தர்கள் தொடர்ந்து எரிமேலி, பம்பைக்கு செல்ல பஸ் வசதி குறைவாக இருப்பதால் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அதனால் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் துவக்கத்திலும் குமுளியில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

