/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பாம்பு கடி சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை தேனி மருத்துவக்கல்லுாரிக்கு அனுப்பும் அவலம் கம்பம் அரசு மருத்துவமனையில் சிறப்பு பிரிவு இருந்தும் பயனில்லை

ADDED : அக் 02, 2024 07:18 AM
கம்பம் : பாம்புகடியால் பாதித்து கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்களை சிகிச்சை அளிக்காமல் தேனி மருத்துவக்கல்லூரிக்கு பரிந்துரை செய்வது வாடிக்கையாக உள்ளது.விஷ முறிவு சிறப்பு பிரிவு இருந்தும் பயனில்லாத நிலை உள்ளது.
கம்பம் பள்ளத்தாக்கில் சமீபமாக பாம்பு கடியால் இறப்போர் அதிகரித்து வருகிறது. லோயர்கேம்ப், சுருளியாறு மின் நிலையம், தோட்டங்கள், வயல்கள் என வேலைக்கு செல்வோர் பாம்பு கடித்து பலர் இறந்துள்ளனர். அதிகாலையில் தோட்டங்களில் பூப்பறிக்க செல்வோர் பாம்பு கடித்து பலியாகின்றனர்.
சிசிக்சையளிக்க தயக்கம்
இதனால் கம்பம் அரசு மருத்துவமனையில் விஷமுறிவு சிகிச்சை பிரிவு பல ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது. ஆனால் பாம்பு கடியால் பாதித்து இங்கு சிகிச்சைக்கு வருபவர்களை தேனி மருத்துவக் கல்லூரிக்கு அனுப்புகின்றனர். இங்கிருந்து மருத்துவக்கல்லுாரி செல்ல குறைந்தது ஒரு மணி நேரமாகும். அதற்குள் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இது குறித்து டாக்டர்கள் விசாரித்த போது, பாம்பு கடி சிகிச்சையில் முதலில் ரத்த பரிசோதனை செய்ய வேண்டும். அதில் ரத்தம் உறையும் நேரம், வெளியேறும் நேரத்தை கணக்கீட்டு சிகிச்சையளிக்க வேண்டும்.
மிக முக்கிய நேரத்தில் அரசுமருத்துவமனையில் லேப் டெக்னீசியன் இருக்க வேண்டும். கடிபட்டவர் பதட்டத்தில் இருப்பதால் மிக எச்சரிக்கையாக கையாள வேண்டும். இந்த ரிஸ்க் எடுக்க டாக்டர்கள் தயார் ஆகாமல் மருத்துவக்கல்லூரிக்கு அனுப்புகின்றனர். என்றார்.
தேசிய நலக்குழுமம் சார்பில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களுக்கு கடந்தாண்டு தேனி மருத்துவக் கல்லூரியில் பாம்பு கடிக்கு சிகிச்சையளிப்பது எப்படி என பயிற்சி வழங்கியும் பயனில்லை. கம்பம் மருத்துவமனையில் இருந்தும் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வருகின்றனர்.
கம்பம் அரசு மருத்துவமனையில் விஷமுறிவு சிகிச்சை பிரிவு உள்ளது. இங்கு பாம்பு கடிக்கு செலுத்தும் ஏ. எஸ்.வி. (ஆண்டி ஸ்நேக் வீனம்) என்னும் ஊசி மருந்து இருந்தும் பாதிக்கப்பட்வருக்கு ரத்தம் உறையவில்லை என்ற காரணம் கூறுகின்றனர்.
கம்பம் பள்ளத்தாக்கு மலையும், மலை சார்ந்த பகுதியாகும். பாம்பு கடியால் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர். எனவே விஷ முறிவு சிகிச்சை பிரிவை முழு அளவில் தயார் நிலையில் வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.