/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற உதவி பொறியாளருக்கு 2 ஆண்டுகள் சிறை
/
ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற உதவி பொறியாளருக்கு 2 ஆண்டுகள் சிறை
ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற உதவி பொறியாளருக்கு 2 ஆண்டுகள் சிறை
ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற உதவி பொறியாளருக்கு 2 ஆண்டுகள் சிறை
ADDED : ஏப் 09, 2025 03:17 AM

தேனி,:வேளாண் கருவி பெறுவதற்கான மானியத் தொகையை விடுவிக்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற தேனி மாவட்ட வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் ராதாகிருஷ்ணனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தேனியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் விவசாய கருவிகள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தினார்.இவருக்கும் தேனி மாவட்ட வேளாண் பொறியியல் துறையில் உதவி பொறியாளராக பணியாற்றிய ராதாகிருஷ்ணனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. பயனாளிகளுக்கு அரசு வழங்கும் வேளாண் உபகரணங்களுக்கான மானிய தொகையை ‛செக்'மூலம் விடுவிக்க, வேளாண் உதவிப் பொறியாளர் ராதாகிருஷ்ணன் 2015 மார்ச் 6ல் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வழங்க ரவிச்சந்திரனிடம் கேட்டார்.
லஞ்சம் வழங்க விரும்பாத அவர் , தேனி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். 2015 மார்ச் 9ல் ரசாயன பவுடர் தடவிய ரூ.20 ஆயிரம் நோட்டுகளை ரவிச்சந்திரனிடம் வழங்கி, அதனை ராதாகிருஷ்ணன் பெற்ற போது கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தேனி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. உதவிப் பொறியாளர் ராதாகிருஷ்ணனுக்கு 2 ஆண்டுகள் சிறை, ரூ. ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரவணக்குமார் தீர்ப்பளித்தார். மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்புத்துறை சார்பில் துணை சட்ட ஆலோசகர் கவிதா ஆஜரானார்.

