/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தங்கும் விடுதி பயன்பாட்டுக்கு வருவதில் மீண்டும் காலதாமதம் அமைச்சர் வருவதில் சிக்கல்

ADDED : டிச 01, 2024 06:42 AM
மூணாறு : மூணாறில் சுற்றுலாதுறை சார்பிலான தங்கும் விடுதி பயன்பாட்டுக்கு வருவதில் மீண்டும் காலதாமதம் ஏற்பட்டது.
மூணாறுக்கு வரும் சுற்றுலா பயணிகள் குறைந்த கட்டணத்தில் தங்குவதற்கு வசதியாக அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் சுற்றுலா துறை சார்பில் தங்கும் விடுதி கட்ட முடிவு செய்து, அதன் பணிகள் 2014 ஜூலை 4ல் துவங்கியது.
பணிகளை துவங்கி வைத்த அன்றைய சுற்றுலாதுறை அமைச்சர் அனில்குமார், ஓராண்டுக்குள் பணிகளை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் அவ்வாறு பூர்த்தி செய்யும்பட்சத்தில் ஒப்பந்ததாரர் உள்ளிட்டோருக்கு ஒரு பவுன் தங்க மோதிரம் வழங்குவதாக கூறினார்.
ஆனால் அமைச்சர் கூறியதை நிவர்த்தி செய்ய இயலாத நிலையில் பணிகளை பூர்த்தி செய்ய பத்தரை ஆண்டுகள் நீடித்தது.
இந்நிலையில் தங்கும் விடுதி நேற்று (நவ.30) பயன்பாட்டிற்கு வர இருந்தது.
அதனை சுற்றுலாதுறை அமைச்சர் முகம்மதுரியாஸ் திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் பல்வேறு காரணங்களால் அமைச்சர் வர இயலாத நிலை ஏற்பட்டதால் திறப்பு விழா ஒத்தி வைக்கப்பட்டது.
அதனால் தங்கும் விடுதி பயன்பாட்டுக்கு வருவதில் மீண்டும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.