ADDED : அக் 17, 2024 06:17 AM
ஆண்டிபட்டி: கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை அ.தி.மு.க., வடக்கு, தெற்கு ஒன்றியங்கள் சார்பில் செயல் வீரர்கள், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடமலைக்குண்டு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
வடக்கு ஒன்றியச் செயலாளர் செந்தட்டிக்காளை தலைமை வகித்தார். தெற்கு ஒன்றியச் செயலாளர் ராமர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக தேனி கிழக்கு மாவட்டச் செயலாளர் ராமர், அமைப்புச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ., மகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். 2026 சட்டசபை தேர்தலை மையமாக வைத்து கட்சி நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும், உறுப்பினர் கார்டுகளை முறையாக வினியோகிக்க வேண்டும். மாற்றுக் கட்சியில் உள்ளவர்களை அ.தி.மு.க., கட்சியில் இணைப்பது உட்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முன்னாள் எம்.பி., பார்த்திபன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் கணேசன், மாநில ஜெ., பேரவை இணைச் செயலாளர் ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

