/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குடிநீர் மேல் நிலைத் தொட்டிகள் சுத்தம் செய்ய நடவடிக்கை தேவை
/
குடிநீர் மேல் நிலைத் தொட்டிகள் சுத்தம் செய்ய நடவடிக்கை தேவை
குடிநீர் மேல் நிலைத் தொட்டிகள் சுத்தம் செய்ய நடவடிக்கை தேவை
குடிநீர் மேல் நிலைத் தொட்டிகள் சுத்தம் செய்ய நடவடிக்கை தேவை
ADDED : டிச 13, 2024 05:06 AM
கம்பம்: குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்தம் செய்ய உள்ளாட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுச் சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது.
குடிநீர் பாதுகாக்கப்பட்டதாக இருக்க வேண்டும், மேல்நிலைத் தொட்டிகள் சுத்தமாக பராமரிக்க வேண்டும். நகராட்சிகளில் குளோரினேசன் சரியானவிகிதத்தில் மேற்கொண்டாலும், மேல் நிலைத் தொட்டியை சுத்தம் செய்வது அத்தி பூத்தாற் போல தான் மேற்கொள்ளப்படுகிறது.
ஒவ்வொரு மேல்நிலைத் தொட்டியிலும் டன் கணக்கில் சகதி சேகரமாகி உள்ளது.
காரணம் ஆண்டிற்கு ஒரு முறை கூட பல ஊர்களில் சுத்தம் செய்வது இல்லை. இதனால் தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.
எனவே குறிப்பிட்ட கால இடைவெளியில் ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளை சுத்தம் செய்வதை உறுதி செய்ய பொதுச் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.