ADDED : நவ 02, 2024 08:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி அருகே மேலப்பரவு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து 33. இவரது கொழுந்தியா வனிதாவை முந்தலில் வசிக்கும் செல்லப்பாண்டி 30,காதல் திருமணம் செய்துள்ளார். இதனால் வனிதாவின் பெற்றோர் மாரிமுத்து குடும்பத்தை மட்டும் கவனித்து வந்துள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த செல்லப்பாண்டி மாரிமுத்துவை அலைபேசியில் தகாத வார்த்தையால் பேசி உள்ளார். தட்டி கேட்ட மாரிமுத்துவை செல்லப்பாண்டி அரிவாளால் தலையில் வெட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். மாரிமுத்து புகாரில் செல்லப்பாண்டி மீது குரங்கணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

