/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வாக்காளர் அட்டையுடன் 61 சதவீதம் ஆதார் இணைப்பு
/
வாக்காளர் அட்டையுடன் 61 சதவீதம் ஆதார் இணைப்பு
ADDED : பிப் 15, 2024 06:20 AM
தேனி: மாவட்டத்தில் நான்கு சட்டசபை தொகுதிகளில் ஆண்கள் 5.44 லட்சம், பெண்கள் 5.67 லட்சம், மற்றவர்கள் 193 பேர் என 11, 15,315 பேர் வாக்களார் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இரட்டை ஓட்டுப்பதிவு, ஒரே வாக்காளருக்கு இரு இடங்களில் ஓட்டுரிமை ஆகியவற்றை தடுக்க வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தப்பட்டது. ஆன்லைன், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் மூலம் இணைக்கும் பணிகள் நடந்து வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 6,86,490 பேர் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைந்துள்ளனர். இது 61.55 சதவீதமாகும். அதிகபட்சமாக போடி தொகுதியில் 69.53 சதவீதம் ஆதார் இணைத்துள்ளனர். பெரியகுளத்தில் 56.77, ஆண்டிப்பட்டியில் 61.20, கம்பத்தில் 59.01 சதவீதம் ஆதார் இணைத்துள்ளனர்.

