/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேர்தல் முடிந்ததும் கிடைக்காத அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை எங்க... இப்ப... ஜோரா கை தட்டுங்க...

ADDED : ஏப் 04, 2024 11:49 PM
சின்னமனூர் : மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு நானும், ராமகிருஷ்ணனும் தேர்தல் முடிந்ததும் இந்த பஸ் ஸ்டாண்டுல உட்கார்ந்து கொள்வோம். அதிகாரிகளை அழைத்து கிடைக்காத அனைவருக்கும் வாங்கி தருவோம். எங்க ... இப்ப கையை தட்டுங்க .. என்று ஒடைப் பட்டியில் தங்க தமிழ்செல்வன் கலகல பேச்சு பேசினார்.
தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் நேற்று ஓடைப்பட்டி, வெள்ளையம்மாள்புரம், அப்பிபட்டி உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரம் செய்து பேசியதாவது : சட்டசபை தேர்தலில் இத் தொகுதியில் தி.மு.க.விற்கு 43 ஆயிரம் ஒட்டுக்கள் அதிகம் கிடைத்தது. இந்த தேர்தலில் 53 ஆயிரம் ஒட்டுக்கள் அதிகம் கிடைக்கும் என்று எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
இந்த ஊர் பெயர் ஓடைப்பட்டி. மழை காலங்களில் மழை வெள்ள நீர் அதிகமாக வரும். நம் முன்னோர்கள் விவரமானவர்கள். இந்தப் பக்கம் அரசமரம், அந்த பக்கம் ஆலமரம், இப்ப நீங்க புங்க மரம் வைத்துள்ளீர்கள் என பேசிக் கொண்டிருந்தார். அப்போது, பெண்கள் இடைமறித்து மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை என்றனர்.
அதற்கு தமிழ்செல்வன், அம்மா இந்த தேர்தல் முடிந்த 5 நாட்களில் நானும் அண்ணன் ராமகிருஷ்ணனும் இந்த பஸ் ஸ்டாண்டுல வந்து உட்கார்ந்து கொள்வோம். அதிகாரிகளை கூப்பிடுவோம். உரிமை தொகை கிடைக்காத அனைவருக்கும் வாங்கி தருவோம். இப்ப சந்தோவும் தானே.. எங்க.. இப்ப.. கையை தட்டுங்க. என்றதும் பெண்களும் கையை தட்டி ஆராவரம் செய்தனர். ஓட்டு முக்கியம்.. தாயி மறந்திடாதம்மா... ஓட்டு போட்டுறுங்கமா... என்று கூறி சென்றார். வேட்பாளருடன் எம்.எல். ஏ . ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.