/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வீடியோ கண்காணிப்பு குழுக்கள் பணி நிறைவு பறக்கும் படை பணி குறித்து குழப்பம்

ADDED : ஏப் 19, 2024 05:49 AM
கம்பம்: தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த வீடியோ கண்காணிப்பு குழு, செலவு கணக்கிடும் குழுக்களின் பணி நேற்று மாலையுடன் முடிந்தது. பறக்கும் படை பணி குறித்து முடிவு எடுக்க முடியாத குழப்பம் உள்ளது.
தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்னரே ஒரு சட்டசபை தொகுதிக்கு 3 பறக்கும் படை குழு, இரண்டு நிலை கண்காணிப்பு குழு, இரண்டு வீடியோ கண்காணிப்பு குழுக்கள், இரண்டு செலவினம் கணக்கிடும் குழுக்கள் தயார் செய்யப்பட்டு, தேதி அறிவிக்கப்பட்டவுடன் பணியை துவக்கினார்கள்.
இந்த குழுக்களின் பணிகள் குறிப்பாக வீடியோ கண்காணிப்பு குழுக்கள், செலவினம் கணக்கிடும் குழுக்களின் பணி தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த ஏப். 17 மாலையுடன் முடிவிற்கு வந்தது.
இருந்த போதும் நேற்று காலை செலவினம் கணக்கிடும் குழுக்கள், எடுக்கப்பட்ட வீடியோக்களை பார்த்து கணக்கீடு செய்யும் பணிகள் நேற்று காலை நடைபெற்றது. அந்த பணிகள் நேற்று நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று மாலையுடன் வீடியோ கண்காணிப்பு குழுக்கள், செலவினம் கணக்கிடும் குழுக்களின் பணி முடிவிற்கு வந்தது.ஆனால் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்களின் பணிகள் ஜுன் 4 வரை இருக்கும் என்று தேர்தல் கமிஷன் கூறியிருப்பதால், அவர்களின் பணிக்காலம் மட்டும் குழப்பத்தில் உள்ளது.