/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஹைவேவிஸில் சுற்றுலா பயணிகள் அனுமதியில் கண்காணிப்பு அவசியம்
/
ஹைவேவிஸில் சுற்றுலா பயணிகள் அனுமதியில் கண்காணிப்பு அவசியம்
ஹைவேவிஸில் சுற்றுலா பயணிகள் அனுமதியில் கண்காணிப்பு அவசியம்
ஹைவேவிஸில் சுற்றுலா பயணிகள் அனுமதியில் கண்காணிப்பு அவசியம்
ADDED : மே 21, 2024 07:48 AM
சின்னமனூர் : ஹைவேவிஸ் மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிப்பதில் வனத்துறை சோதனை சாவடியில் கண்காணிப்பு தேவை என இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- தேனி மாவட்டத்தில் ஹைவேவிஸ் மலைப்பகுதி சுற்றுலா தலமாக உள்ளது.
ஹைவேவிஸ், மணலாறு இரவங்கலாறு வியூபாயிண்ட் , வெண்ணியாறு, மகாராசாமெட்டு உள்ளிட்ட பகுதிகள் மூணாறுக்கு இணையாக இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளாகும். எனவே தினமும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.
ஹைவேவிஸ் மலைப்பகுதிகளுக்கு செல்ல அடிவாரத்தில் தென்பழநி அருகில் உள்ள வனத்துறை சோதனை சாவடியில் கையெழுத்திட்டு அனுமதி பெற்று செல்ல வேண்டும்.
சமீப காலங்களில் டூவீலரில் 3 இளைஞர்கள் அமர்ந்து மலைப்பாதையில் வீலிங் செய்வது அதிகரித்து வருகிறது. டூ வீலரில் 3 பேர் செல்ல வனத்துறை சோதனை சாவடியில் எப்படி அனுமதிக்கின்றனர் என தெரியவில்லை.
மேலும் இளைஞர்கள் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள், பாலிதீன் பைகளில் உணவு உள்ளிட்ட பொருள்களை கொண்டு செல்கின்றனர். சாப்பிட்டு விட்டு வனப்பகுதியில் பிளாஸ்டிக் டம்ளர்களையும், பாலிதின் பைகளையும் எறிந்து செல்கின்றனர்.
வன உயிரினங்கள் அதை தின்று பலியாக வாய்ப்புகள் உள்ளது. எனவே சுற்றுலா பயணிகளை அனுமதிக்கும் போது வனத்துறை சோதனை சாவடி கண்காணிப்புடன் செயல்பட இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

