/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
திருக்குறள் ஒப்புவித்து மாணவர்கள் சாதனை
/
திருக்குறள் ஒப்புவித்து மாணவர்கள் சாதனை
ADDED : செப் 17, 2024 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார், : தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாநில அளவில் நடத்திய திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் கூடலுார் என்.எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
பத்தாம் வகுப்பு மாணவர் பி.சிவசூர்யா, ஒன்பதாம் வகுப்பு மாணவர் பி.சிவசந்துரு ஆகியோர் 1330 குறட்பாக்களையும் ஒப்புவித்து தமிழக அரசிடம் தலா ரூ.15,000 மற்றும் பாராட்டு சான்றிதழையும் பெற்றனர். இருவரும் சகோதரர்கள்.
சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளியில் நடந்தது. பள்ளித் தாளாளர் ரம்பா, தலைவர் பொன்குமரன், தலைமை ஆசிரியர் வெங்கட்குமார், செயற்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.

