/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பிரச்னையை பேசாத வேட்பாளர்கள் வசை பாடுவதே பிரதானம்
/
பிரச்னையை பேசாத வேட்பாளர்கள் வசை பாடுவதே பிரதானம்
ADDED : ஏப் 07, 2024 05:21 AM
கம்பம், : தேனி தொகுதியின் தீர்வு காணாத பிரச்னைகள் என்ன, தேவை என்ன என்பது பற்றி வேட்பாளர்கள் பேசாமல் பிரசாரத்தில் ஒருவர் மீது ஒருவர் வசை பாடுவதையே பிரதானமாக பேசி வருகின்றனர்.
தேனி லோக்சபா தேர்தலில் தி.மு.க. அ.தி.மு.க. அ.ம.மு.க. நா.த.க., போட்டியிடுகிறது. மூன்று வாரங்களுக்கு மேல் தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது. அமைச்சர் உதயநிதி, கனிமொழி எம்.பி. சீமான், முன்னாள் அமைச்சர் உதயகுமார் ஆகியோர் பேசி சென்றுள்ளனர். வேட்பாளர்கள் தங்க தமிழ்செல்வன், தினகரன், நாராயணசாமி, மதன் ஆகியோர் தினமும் திறந்த வேனில் ஆதரவு திரட்டி பிரசாரம் செய்து வருகின்றனர்.
வேட்பாளர்களில் ஒருவர் கூட ஆறு சட்டசபை தொகுதிகளிலும் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்னைகள், மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள், ஆக்கபூர்வமான விஷயங்கள் பற்றி பேசவில்லை.
ஒவ்வொரு வேட்பாளரும் பரஸ்பரம் குற்றம் சாட்டியே பேசுகின்றனர். தொகுதி பிரச்னை என்ன, அவற்றை தீர்க்க வழி என்ன, நான் முயற்சி செய்வேன் என்பது மாதிரியான பேச்சுகளே பிரசாரத்தில் இடம் பெறவில்லை. வேட்பாளர்களின் பேச்சுக்களை கேட்டு பொதுமக்களும் முகம் சுளிக்க ஆரம்பித்து விட்டனர்.

