/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஓட்டு எண்ணும் மையத்தில் பார்வையாளர்கள் ஆய்வு
/
ஓட்டு எண்ணும் மையத்தில் பார்வையாளர்கள் ஆய்வு
ADDED : ஏப் 15, 2024 01:10 AM
தேனி, - தேனி லோக்சபா தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் கொடுவிலார்பட்டியில் உள்ள தேனி கம்மவார் சங்க கல்வி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இங்கு ஏப்.,19ல் தேர்தல் முடிந்த பின் 6 சட்டசபை தொகுதிகளில் இருந்தும் ஓட்டுப்பெட்டிகள் கொண்டு வரப்படும். அங்கு அடிப்படை வசதிகள், கட்டுப்பாட்டு அறை, ஓட்டு எண்ணிக்கை மையம், கேமரா அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. முன்னேற்பாடு பணிகளை தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில், பொதுப்பார்வையாளர் கவுரங்பாய் மக்வானா, போலீஸ் பார்வையாளர் ஸ்ரீஜித் பார்வையிட்டனர். எஸ்.பி., சிவபிரசாத், டி.ஆர்.ஒ., ஜெயபாரதி, ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

