/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கோடை உழவு செய்வதால் மண் வளம் அதிகரிக்கும்
/
கோடை உழவு செய்வதால் மண் வளம் அதிகரிக்கும்
ADDED : மே 25, 2024 04:22 AM
கம்பம், : கோடை உழவு செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து வேளாண் துறை விளக்கமளித்துள்ளது.
இது தொடர்பாக வேளாண் துறையினர் கூறியிருப்பதாவது : கோடை மழை பெய்யும் போது மழை நீரை வீணாக்காமல் இருக்க கோடை உழவு மேற்கொள்ள வேண்டும். மானாவாரி நிலங்களின் கடினமாக உள்ள மண்ணின் இறுக்கம் குறையும். மண்ணை புழுதிபட உழுவதால், மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கிறது.
காற்றோட்டம் அதிகரிப்பதால் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் நன்கு வளர்ச்சி அடையும் களைக்கொல்லி, பூச்சிகொல்லி மருந்துகளின் வீரியம் குறைந்து மண்ணின் விஷத்தன்மை குறைகிறது. நீர் நன்கு ஊடுருவி சென்று வேர் மண்டலம் வரை சென்று நீர் உறிஞ்சும் தன்மை அதிகரிக்கிறது. களைகளின் விதைகள் மேல் பகுதிக்கு வந்து சூரிய வெப்பத்தால் அழிந்து விடுகிறது. பூச்சிகளின் முட்டைகளும், கூண்டு புழுக்களும் அழிக்கப்படுகின்றன. தாவர கழிவுகளின் மக்கும் தன்மை அதிகரிக்கிறது. மண் வளம் அதிகரிக்கிறது.
மழை நீர் சிறிதும் வீணாகாமல் பயிருக்கு கிடைக்கிறது. இதனால் மழைநீர் சேகரிப்பு திறன் அதிகரிக்கிறது. எனவே மாவட்டத்தில் மானாவாரி நிலங்களில் இன்னமும் கோடை உழவு செய்யாதவர்கள் உடனே கோடை உழவை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.

