/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஓட்டுச்சாவடிகளின் நிலவரத்தை செயலியில் பதிவேற்ற வேண்டும்: ஒரு மணிநேரத்திற்கு ஒரு 'அப்டேட்' அவசியம்

ADDED : ஏப் 10, 2024 06:21 AM
தேனி : ஓட்டுச்சாவடி நிலவரங்களை ஏப்.,18 முதல் தேர்தல் ஆணைய செயலியில் பதிவேற்ற வேண்டும் என பயிற்சியில் பங்கேற்ற அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் ஏப்.,19ல் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது.இதில் பணிபுரிய உள்ள ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு நேற்று முன்தினம் 2ம் கட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டது. பயிற்சியில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் மாதிரிகள் வைத்து பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் தேர்தல் ஆணையத்தின் ஓட்டுச்சாவடி பற்றிய 'போல் மானிடரிங் சாப்ட்வேர்' (பி.எம்.எஸ்.,) செயலி பற்றி விளக்கப்பட்டது.
இச்செயலி பற்றி அதிகாரிகள் கூறுகையில், ஓட்டுப்பதிவிற்கு முந்தையநாள் ஓட்டுச்சாவடி முதன்மை அலுவலர், பி.ஓ., முதல்நிலை அலுவலர்கள் என இருவருக்கு பி.எம்.எஸ்., செயலி பயன்பாட்டிற்கான 'ஐ.டி., பாஸ்வேர்டு' வழங்கப்படும். அலுவலர்கள் குழுவினர் ஓட்டுச்சாவடிக்கு சென்றதும் அதனை பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்னர் வழங்கப்பட்டுள்ள கருவிகள் சரியாக உள்ளனவா என்பதை பதிவேற்ற வேண்டும். ஓட்டுப்பதிவு நாள் அன்ற அதிகாலை 5:30 மணிக்கு அரசியில் கட்சியனர் முன்னிலையில் மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தி அதனையும் பதிவேற்ற வேண்டும். ஓட்டுப்பதிவு துவங்கிய நேரம், ஒவ்வொரு ஒரு மணிநேரத்திற்கும் பதிவாகும் ஓட்டுகளின் எண்ணிக்கை ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக ெதரிவித்தனர்.