/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வீடுகளில் குப்பையில் இருந்து உரம் தயாரிக்க பயிற்சி வழங்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
/
வீடுகளில் குப்பையில் இருந்து உரம் தயாரிக்க பயிற்சி வழங்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
வீடுகளில் குப்பையில் இருந்து உரம் தயாரிக்க பயிற்சி வழங்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
வீடுகளில் குப்பையில் இருந்து உரம் தயாரிக்க பயிற்சி வழங்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
ADDED : மே 02, 2024 05:59 AM
தேனி: 'நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குப்பையை தரம் பிரிக்க இயலாமலும், பல இடங்களில் அவற்றை தீ வைப்பதாலும் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்துள்ளது. அதனை தவிர்க்க உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வீட்டில் உரம் தயாரிக்கும் முறையை ஊக்கபடுத்த வேண்டும்.' என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்டத்தில் 6 நகராட்சிகள், 22 பேரூராட்சிகள், 8 ஒன்றியங்களில் 130 ஊராட்சிகள் உள்ளன. இதில் ஒவ்வொரு நகராட்சியிலும் தினமும் சராசரியாக 25 டன் குப்பை வரை கையாளப்படுகிறது.
இதில் சரிபாதி பிளாஸ்டிக் குப்பையாக உள்ளது. மேலும் போதிய அளவில் நுண் உர செயலாக்க மையங்கள் இல்லாததால் மாவட்டத்தில் மக்கும் குப்பையை உரமாக மாற்றுவதில் சிக்கல் தொடர்கிறது.
பல இடங்களில் நுண் உர செயலாக்க மையங்கள் பயனின்றி உள்ளது.பொது மக்களிடமும் குப்பையை பிரித்து வழங்கும் ஆர்வம் இல்லை. இதனால் குப்பையை பிரித்து உரமாக்குவதில் தொய்வு நிலவுகிறது.
பொது இடங்களில் சிலர் குப்பை கொட்டி செல்கின்றனர்.
இதனை கால்நடைகள், நாய்கள் ரோட்டில் வாரி இறைப்பதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. நெடுஞ்சாலை ஓரங்களில் கொட்டப்படும் குப்பைக்கு சிலர் தீ வைக்கின்றனர். இதனால் காற்று மாசுடன், வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர்.
குப்பையை தரம்பிரித்து வழங்க வீடுதோறும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் விழிப்புணர்வை தீவிரப்படுத்த வேண்டும்.
மேலும் மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கவும், அதனை வீட்டு மாடித்தோட்டம், அழகுத் தாவரங்கள்
வளர்ப்பிற்கு பயன்படுத்த பயிற்சிகள் வழங்க வேண்டும்.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர் மறுசுழற்சி தொடர்பாக பேனர்கள் மட்டும் வைப்பதை தவிர்த்துவிட்டு, களத்தில் பயிற்சி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

