/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
* சுருளி, மேகமலை பகுதியில் கணிசமாக அதிகரிப்பு: மலபார் அணில்களை பாதுகாப்பது அவசியம்
/
* சுருளி, மேகமலை பகுதியில் கணிசமாக அதிகரிப்பு: மலபார் அணில்களை பாதுகாப்பது அவசியம்
* சுருளி, மேகமலை பகுதியில் கணிசமாக அதிகரிப்பு: மலபார் அணில்களை பாதுகாப்பது அவசியம்
* சுருளி, மேகமலை பகுதியில் கணிசமாக அதிகரிப்பு: மலபார் அணில்களை பாதுகாப்பது அவசியம்
ADDED : செப் 30, 2024 05:13 AM

கம்பம்: சுருளி அருவியில் மலபார் மலை அணில்கள் காணப்படுவதால், அழிந்துவரும் நிலையில் உள்ள இந்த அரிய வகை அணில்கள் இனத்தை பாதுகாக்க ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகம் துணை இயக்குனரகம் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைளை முன்னெடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்திய மலை அணில் அல்லது மலபார் மலை அணில் என்றழைக்கப்படும் இந்த வகை அணில்கள் உயரமான மரத்தின் மீது, கிளைகளில் வாழும். தனியாகவோ, ஜோடியாகவோ காணப்படும். அதிகாலை நேரங்களிலும், மாலை நேரங்களில் மட்டும் அதிகமாக வெளிவரும். மற்ற நேரங்களில் ஓய்வெடுக்கும் குணம் கொண்டது. தாவர உண்ணியான இந்த வகை அணில்கள் பழங்கள், இலைகள், கொட்டைகள் போன்றவைகளையும், புழு, பூச்சிகளையும் சாப்பிட்டு உயிர் வாழும். மஹாராஷ்டிரா மாநில அரசின் விலங்காக உள்ளது.
தமிழகம், கர்நாடகா, கேரளா, போன்ற தென் மாநிலங்களிலும், இலங்கையின் வனப்பகுதிகளிலும் அதிகளவில் காணப்படுகின்றன. வாழ்விடங்கள் குறைதல், வேட்டை போன்ற காரணிகளால் இதன் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.
எனவே சர்வதேச அமைப்பான ஐ.யூ.சி.என். (international Union For Conservation Nature) என்ற அமைப்பு, மலபார் மலை அணிலை அழிந்து வரும் பட்டியலில் சேர்த்து, பாதுகாக்க கேட்டுக் கொண்டுள்ளது. தேனி மாவட்டத்தில் மேகமலை பகுதியில் வெள்ளிமலை, அரசரடி, சுருளிமலை, வண்ணாத்தி பாறை பகுதிகளில் கணிசமாக காணப்படுகிறது. இந்த இனத்தை அழிவில் இருந்து பாதுகாக்க புலிகள் காப்பக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

