/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆவணம் இன்றி கொண்டு வந்த ரூ.1.27 லட்சம் பறிமுதல்
/
ஆவணம் இன்றி கொண்டு வந்த ரூ.1.27 லட்சம் பறிமுதல்
ADDED : ஏப் 04, 2024 11:45 PM
தேனி : லோக்சபா தேர்தலை முன்னிட்டு பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைத்து வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்க சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று மாலை 5:00 மணி அளவில் கொடுவிலார்பட்டி அருகே மணிகண்ட பிரசன்னா தலைமையிலான நிலை கண்காணிப்புக்குழு சோதனை செய்தனர். அவ்வழியாக காரில் வந்த கடமலைக்குண்டுவில் பலசரக்கு கடை வைத்துள்ள வீரணன் 52, காரினை சோதனை செய்தனர். சோதனையில் ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.72,690 யை பறிமுதல் செய்தனர்.
இதே குழு போடி விலக்கு அருகில் சோதனை செய்தனர். அப்போது ஓடைப்பட்டி சென்றாயபெருமாள் 37, வந்த காரினை சோதனை செய்தனர்.
அதில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 55 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த ரூ.1.27 லட்சத்தை போடி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

