/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உர மூடைகளில் பிரதமர் மோடி படம் மறைத்து விற்பனை செய்ய உத்தரவு
/
உர மூடைகளில் பிரதமர் மோடி படம் மறைத்து விற்பனை செய்ய உத்தரவு
உர மூடைகளில் பிரதமர் மோடி படம் மறைத்து விற்பனை செய்ய உத்தரவு
உர மூடைகளில் பிரதமர் மோடி படம் மறைத்து விற்பனை செய்ய உத்தரவு
ADDED : மார் 30, 2024 04:07 AM
கூடலுார் : உர மூடைகளில் இடம்பெற்றுள்ள மோடி படத்தை மறைத்து விற்பனை செய்ய தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
தேனி மாவட்டம் விவசாயம் நிறைந்த பகுதியாகும். விளை நிலங்களுக்கு பயன்படுத்த உர முடைகள் அதிகம் விற்பனையாகும் மாவட்டமாகவும் உள்ளது. அனைத்து உரமூடைகளிலும், பிரதமர் மோடியின் படம் இடம்பெற்றுள்ளது. தேர்தல் விதியை மீறி விற்பனை செய்யப்படுவதாக தேர்தல் அதிகாரிக்கு புகார் சென்றது.
இதனைத் தொடர்ந்து தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் மோடி படத்துடன் உள்ள உர மூடைகளை, விற்பனை செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தேர்தல் நடத்தும் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
உரம் அத்தியாவசிய பொருள்களின் சட்டத்தின் கீழ் வருவதாலும் தற்போது பயிர் சாகுபடி நடைபெறுவதனைத் தொடர்ந்தும் உரத் தேவையை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி படத்தை மறைத்து சில நிபந்தனைகளுடன் உர மூடைகளை விற்பனை செய்யலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனைப் பின்பற்றாமல் உரமூடைகளை விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

