/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முக்கிய இடங்களில் ஓ.பி.எஸ்., பிரசாரம்: தினகரன் திட்டம்
/
முக்கிய இடங்களில் ஓ.பி.எஸ்., பிரசாரம்: தினகரன் திட்டம்
முக்கிய இடங்களில் ஓ.பி.எஸ்., பிரசாரம்: தினகரன் திட்டம்
முக்கிய இடங்களில் ஓ.பி.எஸ்., பிரசாரம்: தினகரன் திட்டம்
ADDED : ஏப் 12, 2024 06:12 AM
கம்பம்: தேனி தொகுதியில் முக்கிய இடங்களில் ஓ.பி.எஸ்.,யை பிரசாரத்தில் இறக்கி விட தினகரன் முடிவு செய்துள்ளார். தமிழகத்தில் கோவை, நீலகிரி, விருதுநகர், சிதம்பரம், தென்காசி, தென் சென்னை உள்ளிட்ட சில தொகுதிகள் ஸ்டார் தொகுதிகளாக உள்ளன.
அந்த பட்டியலில் தேனி தொகுதியும் இடம் பெறுகிறது. காரணம் அ. ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன் போட்டியிடுகிறார்.தேனி தொகுதியில் முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்திற்கு பின் அக்கட்சியினர் தீவிர தேர்தல் பணியில் இறங்கியுள்ளனர்.
மேலும் அ.ம.மு.க., வின் ஸ்பெஷசல் டீம் நடத்திய ஆய்வில் ஓட்டு குறைவாக கிடைக்கும்பூத்களை கண்டறிந்துள்ளனர்.
அந்த இடங்களில் ஓ.பி.எஸ். பிரசாரம் செய்தால் பலன் கிடைக்கும் என ஆலோசனை கூறப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முதுகுளத்தூர் பகுதியில் ஓ.பி.எஸ்.யை ஆதரித்து பிரசாரம் செய்த தினகரன், பிரசாரம் முடிந்த பின் தேனி தொகுதிக்கு வர கோரிக்கை வைத்துள்ளார்.
இதனை ஏற்ற ஓ.பி.எஸ்., ஏப். 15 க்குள் ஒரு நாள் பிரசாரத்திற்கு வர சம்மதித்துள்ளார். வீக் பாயிண்டுகளில் மட்டும் உருக்கமாக பேசி பிரசாரம் - மேற்கொள்ள ஒ.பி.எஸ். திட்டமிட்டுள்ளார். அந்த ஒரு நாள் பிரசாரம் தினகரனுக்கு வலுவூட்டும் என்கின்றனர்.

