/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தொகுதியில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களை உற்சாகப்படுத்த தினகரன் திட்டம்
/
தொகுதியில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களை உற்சாகப்படுத்த தினகரன் திட்டம்
தொகுதியில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களை உற்சாகப்படுத்த தினகரன் திட்டம்
தொகுதியில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களை உற்சாகப்படுத்த தினகரன் திட்டம்
ADDED : மார் 24, 2024 05:47 AM
கம்பம், : தொகுதியில் சோர்ந்துள்ள பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தி களப்பணியாற்ற வைக்க டிடிவி திட்டமிட்டுள்ளார்.
தேனி லோக்சபா தொகுதியில் தி.மு.க., சார்பில் தங்க தமிழ்செல்வன், அ.தி.மு.க. சார்பில் நாராயணசாமி அ.ம.மு.க. பா.ஜ. கூட்டணி சார்பில் டி.டி.வி., தினகரன் போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் தங்களின் கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகின்றனர். இரு கட்சிகளிலுமே அடிப்படை தேர்தல் பணிகள் துவங்கி விட்டனர். அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் டி.டி.வி., தினகரன் இதுவரை எந்த அறிவிப்பும் செய்ய வில்லை. ஆனால் அ.ம.மு.க. பா.ஜ. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்களை நடத்துகின்றனர்.
பா.ஜ..,வினர் வேட்பாளர் யார் என்பது எங்களுக்கு முக்கியமல்ல, எங்கள் கூட்டணியில் யார் நின்றாலும், வெற்றிக்காக பாடுபடுவோம் என கூறி ஒரு மாதத்திற்கு முன்னரே தேர்தல் பணியை துவக்கி விட்டனர்.
பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சோர்வு
தேனி பொறுத்தவரை ஓ.பி.எஸ்.,யின் சொந்த மாவட்டமாகும். இவர் போடி எம்.எல்.ஏ. வாக உள்ளார். மகன் ரவீந்திரநாத் எம்.பி.யாக உள்ளார். இந்த தேர்தலில் பா.ஜ. கூட்டணியில் ரவீந்திரநாத் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு வாய்ப்பில்லாமல் போனதோடு, பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட உள்ளார். இதனால் மாவட்டத்தில் இவரது ஆதரவாளர்கள் மன உளைச்சலில் உள்ளனர்.
இந்த நிலை தொடர்வது நல்லதல்ல என நினைக்கும் டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ். ஆதரவாளர்களை உற்சாகப்படுத்த திட்டமிட்டுள்ளார்.
மேலும் வேட்புமனு தாக்கலின் போது பன்னீர்செல்வத்தை உடன் அழைத்து வரவும், சிட்டிங் எம்.பி. யை தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

