/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வேளாண் துறை சார்பில் ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம் அமைகிறது செயல்விளக்க திடல்

ADDED : ஏப் 21, 2024 05:01 AM
தேனி: மாவட்டத்தில் வேளாண் துறை சார்பில் ஒரு கிராம் ஒரு பயிர் திட்டத்தில் செயல்விளக்க திடல் அமைத்து விவசாயிகளுக்கு செயல்விளக்க பயிற்சி வழங்கப்பட உள்ளது.
தேனி மாவட்டத்தில் வேளாண் பயிர்களான நெல், கரும்பு, வாழை, எண்ணெய் வித்துக்கள் அதிகம் சாகுபடி செய்யப்படுகின்றனர். அதன்படி ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் அதிகமாக சாகுபடி செய்யப்படும் பயிரில் 5முதல் 10 ஏக்கரில் செயல்விளக்க திடல் அமைக்கப்பட உள்ளது.
செயல்விளக்க திடலில் நிலம் தயாரித்தல், அதிக விளைச்சல் தரும் ரகங்கள், விதை நேர்த்தி, விதைப்பு, ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மை முறைகள், ஊட்டசத்து மேலாண்மை ஆகியன ஒவ்வொரு நிலையிலும் பதிவு செய்யப்பட உள்ளது. செயல்விளக்க திடலில் விவசாயிகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் 15 முதல் 20 சதவீத கூடுதல் உற்பத்தி பெற வேண்டும் என்பது இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். இத்திட்டம் 8 வட்டாரங்களிலும் உதவி வேளாண் அலுவலர்கள் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது என வேளாண் இணை இயக்குனர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.