/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆவின் மோர், வெண்ணெய் ஐஸ் கிரீம்களுக்கு தட்டுப்பாடு கண்டு கொள்ளாத அதிகாரிகள்
/
ஆவின் மோர், வெண்ணெய் ஐஸ் கிரீம்களுக்கு தட்டுப்பாடு கண்டு கொள்ளாத அதிகாரிகள்
ஆவின் மோர், வெண்ணெய் ஐஸ் கிரீம்களுக்கு தட்டுப்பாடு கண்டு கொள்ளாத அதிகாரிகள்
ஆவின் மோர், வெண்ணெய் ஐஸ் கிரீம்களுக்கு தட்டுப்பாடு கண்டு கொள்ளாத அதிகாரிகள்
ADDED : ஏப் 29, 2024 05:55 AM
தேனி: மாவட்டத்தில் உள்ள ஆவின் விற்பனை நிலையங்களில் மோர், வெண்ணை, ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றிற்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாட்டை சமாளிக்க தேவையான நடவடிக்கை எடுக்காமல் ஆவின் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக நுகர்வோர் புகார் கூறுகின்றனர்.
கோடை வெயிலை சமாளிக்க பொதுமக்கள் தினமும் குளிர்பானங்கள், இளநீர், பழ ஜூஸ்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். கோடையை சமாளிக்க ஆவின் பாலகங்களில் 200 மி.லி.,மோர் பாக்கெட் ரூ.5க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறைந்த விலையில் தரமான மோர் கிடைப்பதால் பொதுமக்கள் பலரும் ஆர்வமாக வாங்குகின்றனர். ஆனால் ஆவின் போதிய அளவு மோர் பாக்கெட் பாலகங்களுக்கு வழங்குவதில்லை. குறைந்த எண்ணிக்கையில் வழங்குவதால் வந்தவுடன் விற்று தீர்ந்து விடுகிறது. பல ஆவின் பாலங்களில் ரூ.5க்கு விற்க வேண்டிய பாக்கெட் ரூ.8 விற்கின்றனர். அதுவும் கிடைப்பது இல்லை.
தட்டுப்பாட்டை போக்க ஆவின் அதிகாரிகள் எந்த முயற்சியும் செய்வது இல்லை.ஆவின் டெப்போக்களில் குளிர்பானங்களின் விற்பனை பெயரளவில் மட்டும் நடக்கிறது. டெப்போக்களில் வெண்ணெய், குல்பி, ஐஸ்கிரீம் உள்ளிட்டவை கிடைப்பது இல்லை. இது குறித்து கடைக்காரர்கள் சிலர் கூறுகையில், வெண்ணெய், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் ஆர்டர் கொடுத்து 4 நாட்களுக்கு பிறகு தான் பொருட்கள் கிடைக்கிறது. சப்ளை இல்லாததால் மக்கள் ஏமாற்றதுடன் செல்கின்றனர்.
ஆவின் விற்பனை நிலையங்களிலும் மோர், தயிர், வெண்ணெய், ஐஸ்கிரீம் தட்டுப்பாடு இன்றி கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மேலும் பொருட்கள் நிர்ணயம் செய்த விலையில் விற்பனை செய்வதை உறுதிபடுத்திட வேண்டும்.

