sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

நில உரிமையாளரிடம் கையெழுத்து பெற்று மோசடி: மூவர் மீது வழக்கு

/

நில உரிமையாளரிடம் கையெழுத்து பெற்று மோசடி: மூவர் மீது வழக்கு

நில உரிமையாளரிடம் கையெழுத்து பெற்று மோசடி: மூவர் மீது வழக்கு

நில உரிமையாளரிடம் கையெழுத்து பெற்று மோசடி: மூவர் மீது வழக்கு


ADDED : மார் 30, 2024 04:22 AM

Google News

ADDED : மார் 30, 2024 04:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : வீரபாண்டியில் எழுதாத பத்திரத்தில் கையெழுத்து பெற்று மோசடி செய்ததாக தந்தை, மகன், மருமகள் மீது, போலீசார் மோசடி வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

வீரபாண்டி மெயின் ரோடு கருப்பையா 55. இவரது மனைவியின் பூர்வீக நிலம் அதேப் பகுதியில் உள்ளது. மனைவியின் உறவினர்கள் வீரபாண்டி சுப்பிரமணி 56. அவரது மகன் மாரிச்சாமி 35, மருமகள் பிரியங்கா 25, ஆகிய மூவர் இணைந்து, அந்த இடத்தை வாகனங்களை நிறுத்துவதற்காக 2 ஆண்டுகளுக்கு ஒத்திக்கு வாங்கினர். இதற்காக மூவரும், கருப்பையாவிடம் ரூ.2 லட்சம் கொடுத்து எழுதாத பத்திரத்தில் கையெழுத்து பெற்றனர்.

ஒன்றரை ஆண்டில் இடத்தில் போதிய வசதியில்லை' எனக்கூறி கொடுத்த பணத்தை திரும்ப பெற்றனர். பின் பத்திரத்தை தராமல் மோசடி செய்தனர். இந்த முன்விரோதத்தால் கடந்த 2023 அக்., 4ல் கருப்பையாவிற்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

கருப்பையா, தேனி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சுப்பிரமணி, மாரிச்சாமி, அவரது மனைவி பிரியங்கா மீது நடவடிக்கை எடுக்க மனு அளித்தார். நீதிமன்ற உத்தரவில் வீரபாண்டி எஸ்.ஐ., கோகுலகண்ணன் சம்பவம் நடந்து 5 மாதங்கள் கழித்து, மூவர் மீது மோசடி, கொலை மிரட்டல் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us