/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கும்பக்கரை அருவி: குளிர்ச்சியான நீரில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்

ADDED : ஏப் 22, 2024 06:30 AM

பெரியகுளம், : கும்பக்கரை அருவியில் தண்ணீர் வரத்து குறைந்துள்ள நிலையிலும் 'ஜில்'லென தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் குளித்து சென்றனர்.
பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ., தூரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. இந்த அருவியில் ஏப்.14ல் கோடை மழையால் கும்பக்கரை அருவிக்கு தண்ணீர் வந்த நிலையில் தற்போது கோடை வெயில் அதிகரித்துள்ளது. இதனால் அருவியில் தண்ணீர் வரத்து ஏப்.17 முதல் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள், குறைந்தளவு தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த ஆசிரியர் ராமகிருஷ்ணன், அவரது மனைவி ஆசிரியை அபிநயசுந்தரி ஆகியோர், 'குறைவான தண்ணீர் என்றாலும், குளிர்ந்த நீராக வருவதால் ஆனந்தமாக குளித்தோம்' என, மகிழ்ச்சி தெரிவித்தனர்.--