/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மூணாறில் ரேஷன் அரிசியை அதிக விலைக்கு வாங்கி ஏமாறும் நிலை
/
மூணாறில் ரேஷன் அரிசியை அதிக விலைக்கு வாங்கி ஏமாறும் நிலை
மூணாறில் ரேஷன் அரிசியை அதிக விலைக்கு வாங்கி ஏமாறும் நிலை
மூணாறில் ரேஷன் அரிசியை அதிக விலைக்கு வாங்கி ஏமாறும் நிலை
ADDED : ஏப் 14, 2024 04:40 AM
மூணாறு: மூணாறில் சில அரிசி கடைகளில் ரேஷன் அரிசியை பாலீஷ் செய்து அதிக விலைக்கு விற்பனை செய்து தொழிலாளர்களை ஏமாற்றுகின்றனர்.
மூணாறைச் சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர்கலான தமிழர்கள் பெரும்பாலானோர் ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்படும் ஒருவகை புழுங்கல் அரிசியை பயன்படுத்துகின்றனர். அந்த வகை அரிசி கிலோ ஒன்று ரூ.50 முதல் ரூ.55 வரை விற்கப்படுகிறது. அதன் பெயரில் ரேஷன் அரிசியை பாலீஷ் செய்து அதே விலைக்கு விற்பனை செய்து தொழிலாளர்களை ஏமாற்றுகின்றனர். அதனை உறுதிபடுத்தும் வகையில் சமீபத்தில் கடைகளுக்கு பலமுறை ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது.
நேற்று முன்தினம் காலை நகரில் மார்க்கெட் பகுதியில் உள்ள அரிசி கடைக்கு 325 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டு போலீசாரிடம் சிக்கியது. அதே கடைக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு, அத் தகவல் அதிகாரிகளுக்கு சென்றதால் அரிசி மூடைகளை உடனடியாக அப்புறப்படுத்தி விட்டனர். அதே பகுதியில் உள்ள அரிசி கடையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ரேஷன் அரிசி மூடை கணக்கில் சிக்கின. இது போன்ற மோசடி பல ஆண்டுகளாக நடந்து வருகின்றபோதும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. சில கடைகளுக்கு சொந்தமான குடோன்களில் வைத்து மோசடி சம்பவங்கள் நடப்பதாக தெரியவந்தும் நடவடிக்கை இல்லை. இது போன்ற மோசடியில் ஈடுபட்டு தொழிலாளர்களை ஏமாற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

