/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இடுக்கி பா.ஜ.,வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்
/
இடுக்கி பா.ஜ.,வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்
ADDED : ஏப் 03, 2024 07:20 AM

மூணாறு : இத்தொகுதியில் காங்., கூட்டணியில் ' சிட்டிங்' எம்.பி. டீன்குரியாகோஸ், இடது சாரி கூட்டணியில் ஜாய்ஸ்ஜார்ஜ், பா.ஜ., கூட்டணியில் சங்கீதா ஆகியோர் போட்டியிடுகின்றனர். காங்., மற்றும் இடது சாரி கூட்டணிகள் தேர்தல் பணிகளை ஒரு மாதத்திற்கு முன்பு துவக்கி தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பா.ஜ.கூட்டணியில் போட்டியிடும் சங்கீதா தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டாத நிலையில் வேட்பாளர் அறிமுகம் நாளை மறுநாள் (ஏப்.5) மூணாறில் நடக்கிறது.
தாக்கல்: அவர் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டவில்லை என்றபோதும் நேற்று தேர்தல் அதிகாரியான இடுக்கி கலெக்டர் ஷீபாஜார்ஜிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். காங்., மற்றும் இடது சாரி கூட்டணி வேட்பாளர்கள் இன்று (ஏப்.3) வேட்பு மனுக்களை தாக்கல் செய்கின்றனர்.
பிரசாரம்: இடதுசாரி கூட்டணி வேட்பாளர் ஜாய்ஸ் ஜார்ஜை ஆதரித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று (ஏப்.3) தொகுதியில் கோதமங்கலம், ராஜாகாடு, கட்டப்பனை ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.

