/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வாழையில் நுாற்புழுவை கட்டுப்படுத்த விளக்கம்
/
வாழையில் நுாற்புழுவை கட்டுப்படுத்த விளக்கம்
ADDED : ஆக 21, 2024 06:23 AM
கம்பம் : வாழை பயிரில் நூற் புழுக்களை கட்டுப்படுத்துவது குறித்து காந்தி கிராம பல்கலை வேளாண் மற்றும் கால்நடை அறிவியல் பள்ளி மாணவிகள் விளக்கமளித்தனர்.
காந்தி கிராம பல்கலை. வேளாண் மற்றும் கால்நடை அறிவியல் பள்ளி மாணவிகள் விஸ்வப்ரியா, முத்துஸ்ரீ அபிராமி, விசாலினி, அப்ஸனா சப்ரின் ஆகியோர் அய்யம்பட்டியில் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் தங்கி விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பங்களை விளக்கி வருகின்றனர். நேற்று வாழை விவசாயிகளுக்கு வாழைப் பயிரில் காணப்படும் நூற்புழுக்களை கட்டுப்படுத்தும் முறைகளை பற்றி விளக்கினார்கள். குறிப்பாக கார்ப்போ பியூரான் மூலம் நேர்த்தி செய்தல் குறித்து விளக்கினார்கள். இதன் மூலம் வாழையில் நூற்புழு தாக்கம் எவ்வாறு கட்டுப்பத்தப்படுகிறது என்பதை செயல்முறை விளக்கமளித்தனர். கூட்டத்தில் வாழை விவசாயிகள் பங்கேற்றனர்.

