/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இ.கம்யூ., ரூ.11 கோடி, மா.,கம்யூ., கட்சிக்கு ரூ.15 கோடி வருமான வரித் துறை அபராதம் இ.கம்யூ. கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேச்சு

ADDED : ஏப் 15, 2024 01:00 AM
கம்பம், - இ.கம்யூ., கட்சிக்கு ரூ.11 கோடி, மா.கம்யூ., கட்சிக்கு ரூ.15 கோடி வருமான வரித் துறை அபராதம் விதித்திருப்பதாக இ.கம்யூ. கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பொதுக்கூட்டத்தில் கூறினார்.
கம்பத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முத்தரசன் பேசியதாவது:
தேர்தல் கமிஷன், வருமான வரித்துறை, அமலாக்க துறை, சி.பி.ஐ., போன்றவைகள் எல்லாம் எந்த பிரதமராலும் உருவாக்கவில்லை. அரசியலமைப்பு சட்டம் ஏற்படுத்திய தன்னாட்சி அமைப்புகள், ஆனால் இன்றைக்கு பிரதமர் சொல்படி ஆடும் அமைப்புகளாக மாறி விட்டது. மாநில இ.கம்யூ., கட்சிக்கு ரூ.11 கோடி , மார்க்சிஸ்ட் கட்சிக்கு ரூ.15 கோடி அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கம்யூ. கட்சிகளை பற்றி மக்களுக்கு நன்றாக தெரியும். கட்சி உறுப்பினர்கள் தரும் நிதி, கடை கடையாக ஏறி இறங்கி வசூலித்து கட்சியை நடத்துகிறோம்.
காரணம் கேட்டால் உங்களின் வரவு செலவு கணக்குகள் சரியாகவும் இருக்கலாம். தவறாகவும் இருக்கலாம் என்று வருமான வரித்துறை பதில் கூறுகிறது. இது எப்படி இருக்கிறது என்றால் கோர்ட்டில் நீதிபதி ஒருவனை பார்த்து நீ கொலை செய்திருக்கலாம்.செய்யாமலும் இருக்கலாம். உனக்கு ஆயுள் தண்டனை என நீதிபதி கூறினால் எப்படி இருக்கும், அது போன்று உள்ளது.கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 100 கட்டடங்கள், பல வங்கி கணக்குகள் இருப்பதாக அமலாக்க துறை தேர்தல் கமிஷனில் புகார் கூறியுள்ளது. தேர்தல் கமிஷன் விசாரிக்க துவங்கி உள்ளது.எதிர்கட்சிகளை பழி வாங்க ஐ.டி, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்ற அமைப்புகளை பயன்படுத்தி வருகிறது பா.ஜ. இவ்வாறு பேசினார்.