/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெண்கள் சுகாதார வளாக சீரமைப்பு பணி முழுமை பெறாததால் சிரமம் முத்துலாபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதியின்றி தவிப்பு
/
பெண்கள் சுகாதார வளாக சீரமைப்பு பணி முழுமை பெறாததால் சிரமம் முத்துலாபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதியின்றி தவிப்பு
பெண்கள் சுகாதார வளாக சீரமைப்பு பணி முழுமை பெறாததால் சிரமம் முத்துலாபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதியின்றி தவிப்பு
பெண்கள் சுகாதார வளாக சீரமைப்பு பணி முழுமை பெறாததால் சிரமம் முத்துலாபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதியின்றி தவிப்பு
ADDED : ஆக 13, 2024 12:31 AM

சின்னமனூர் : முத்துலாபுரம் ஊராட்சியில் பெண்கள் சுகாதார வளாகங்கள் சீரமைப்பு பணி முழுமை பெறததால் பயன்படுத்த முடியாமல் பெண்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
சின்னமனூர் ஒன்றியம் முத்துலாபுரம் ஊராட்சியில் 11 வார்டுகளில் 5 ஆயிரம் மக்கள் உள்ளனர்.
இந்த ஊராட்சியில் ஊத்துப் பட்டி, கன்னியம்பட்டி, சின்ராம்பட்டி, எம்.துரைச்சாமிபுரம், பள்ளபட்டி ஆகிய உட்கடை கிராமங்கள் அடங்கும். முத்துலாபுரம் ஊருக்குள் நுழையும் இடத்தில் இருந்து ரோட்டோரம் குவியல் குவியலாக குப்பை கொட்டி வைக்கப்பட்டுள்ளது. ஊராட்சி அலுவலகம் அருகில் மலைபோல் குவிந்துள்ளது.
பழைய ஊராட்சி கட்டடம் பயன்பாடின்றியும், நடுநிலைப் பள்ளி பாழடைந்துள்ளது. ரூ.1.80 லட்சம் செலவில் புதுப்பித்துள்ள பெண்கள் சுகாதார வளாகம் பயன் இன்றி உள்ளது. திடக்கழிவு மேலாண்மை திட்டம் முடங்கி விட்டது. ரூ.1 கோடியில் நடைபெற்று வரும் 'ஜல்ஜீவன்' பணிகள் நடைபெறாமல் உள்ளது.
கன்னியம்பட்டி கள்ளர் பள்ளி கூரைகள் சேதமடைந்து மிக மோசமாக உள்ளது. 2002-2003ல் ஆண்டில் கட்டப்பட்ட பெண்கள் சுகாதார வளாகம், 2022- -2023 ல் ரூ.1.80 லட்சத்தில் பராமரிப்பு பணிகள் முழுமைபெறாததால் பெண்கள் அவதிப்படுகின்றனர். பராமரிப்பு பணிசெய்த 2 பெண்கள் சுகாதார வளாகங்களும் பயன்படுத்த அனுமதிக்காமல், வேலையை பாக்கியுள்ளது பயன்பாடு இன்றி உள்ளது.
எம்.துரைச்சாமிபுரத்தில் குடிநீர் தரைத்தொட்டி கட்டும் இடத்தில் சாக்கடை கழிவு நீர் சங்கமமாகிறது. ஆண்கள் கழிப்பறையில் குழாய் சேதமடைந்து பல மாதங்களானதால் கழிப்பறைக்குள் செல்ல முடியாத அவல நிலை உள்ளது.
மயான பாதை குண்டும், குழியுமாக மாறி இறந்தவர்களை அடக்கம் செய்ய கொண்டு செல்வதில் சிரமம் உள்ளது. இங்குள்ள நடுநிலைப் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்துள்ளது. இதனால் மழை நீர் பள்ளிக்குள் குளம் போல் தேங்குகிறது. பொதுமக்கள் கருத்து.
சுகாதாரம் மோசம்
மதியழகன், விவசாயி, முத்துலாபுரம்: குடிநீர் சப்ளையில் பிரச்னை இல்லை. ஆனால் ஜல்ஜீவன் பணிகள் முடிந்தும் அந்த திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்வில்லை. ரூ.1 கோடி செலவழித்தும் வீணாகியது போல் உள்ளது. போதிய துப்புரவு பணியாளர்கள் நியமனம் செய்து துப்புரவு பணி தீவிரப்படுத்த வேண்டும். உயர்நிலைப் பள்ளி கட்ட இடம் வாங்கி அதற்கான பணிகள் செய்ய அனுமதியை பெற முயற்சிக்க வேண்டும்.
முடங்கிய நுாலக கட்டட பணி
சோனையன், கன்னியம்பட்டி: இங்கு நூலகம் அமைக்க பூமி பூஜை போட்ட பின் எந்த பணியும் நடக்கவில்லை. நுாலக கட்டடம் கட்ட வேண்டும். ஆண்களுக்கு பொதுக்கழிப்பறை அமைக்க வேண்டும். பள்ளி கட்டடத்தில் மேற்கூரை ஒடுகள் சேதமடைந்துள்ளதை சரி செய்ய வேண்டும்.
தண்ணீர் இல்லாத கழிப்பிடம்
மூக்கன், எம்.துரைச்சாமிபுரம்: குடிநீர் தரை மட்ட தொட்டி அமைக்கும் இடத்தில் சாக்கடை மற்றும் கழிப்பறை கழிவு நீர் சங்கமமாகிறது. குடிநீர் தரைத் தொட்டியை அதன் மேலேயே கட்டுவதால் குடிநீரின் சுகாதாரம் பாதிக்கும் அபாயம் உள்ளது. மயான சாலை மிக மோசமாக உள்ளது சீரமைக்க வேண்டும். ஆண்கள் கழிப்பறையில் குழாய் சேதமடைந்து தண்ணீர் இல்லாததால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
தரைமட்ட தொட்டி பற்றி தவறான புரிதல்
இப் பிரச்னைகள் பற்றி ஊராட்சியில் விசாரித்த போது, ஜல்ஜீவன் திட்டப் பணிகள் ரூ.1 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது இன்னும் நிறைவு பெறவில்லை. துரைச்சாமிபுரத்தில் கட்டப்பட்டு வரும் தரைத் தொட்டி பற்றி அப்பகுதி மக்கள் தவறான புரிதலுடன் உள்ளனர்.
சுமார் 2 அடிக்கு தரையில் ஆர்.சி. போட்டு தான் கட்டுமான பணி நடக்கும். அதில் கழிவு நீர் கல்க்காது. அங்குள்ள கழிப்பறை குழாய்களை சிலர் தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றனர்.
எத்தனை முறை தான் குழாய்களை மாற்ற முடியும். கன்னியம்பட்டி, முத்துலாபுரம் பெண்கள் சுகாதார வளாகங்கள் பணி முடிந்து பயன்பாட்டில் உள்ளது என்றனர்.

