/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேர்தல் அலுவலகம் அமைக்காததால்தி.மு.க., கூட்டணியில் குமுறல்
/
தேர்தல் அலுவலகம் அமைக்காததால்தி.மு.க., கூட்டணியில் குமுறல்
தேர்தல் அலுவலகம் அமைக்காததால்தி.மு.க., கூட்டணியில் குமுறல்
தேர்தல் அலுவலகம் அமைக்காததால்தி.மு.க., கூட்டணியில் குமுறல்
ADDED : ஏப் 06, 2024 04:27 AM
தேனி : தேனியில் இண்டியா கூட்டணி கட்சிக்கான தேர்தல் அலுவலகம் துவக்கததால் 13 கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தேனி லோக்சபா தொகுதியில் இண்டியா கூட்டணி சார்பில் தி.மு.க., மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் போட்டியிடுகிறார். தேர்தல் பணி துவங்கி 20 நாட்களுக்கு மேலாகியும் மாவட்ட தலைநகரான தேனியில் இதுவரை கட்சி தலைமை தேர்தல் அலுவலகம், மாவட்ட தேர்தல் பணிக்குழு என அமைக்க வில்லை. தி.மு.க., நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் வேட்பாளரை சந்திக்க வேண்டும் என்றால் அவர் பி.சி.,பட்டியில் தங்கி உள்ள ஓட்டல், அல்லது தி.மு.க., நகர அலுவலகத்தில் தேட வேண்டியுள்ளது. தங்கியுள்ள லாட்ஜ்க்கு சென்றால் வேட்பாளர் குறித்த விபரம் கூறுவதில்லை. அறையை காலி செய்து சென்று விட்டார் என அங்குள்ள ஊழியர்கள் கூறுகின்றனர். பல கி.மீ.,துாரத்தில் இருந்து தேனி வரும் தொண்டர்கள், நிர்வாகிகள் வேட்பாளர், தேர்தல் பொறுப்பாளர்கள் யாரையும் சந்திக்காமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
கூட்டணி கட்சியினர் கூறுகையில், வேட்பாளரை சந்திக்க கட்சி நிர்வாகிகள் அனைவரும் அவர் தங்கியுள்ள லாட்ஜ்க்கு செல்ல முடியவில்லை. கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணி பற்றி ஆலோசிக்க மற்ற கட்சியின் அலுவலகத்திற்கு செல்வதில் பலருக்கும் உடன்பாடு இல்லை.
தேர்தல் அலுவலகம் துவங்கி, தேர்தல் பணிக்குழு அமைத்தால் தேர்தல் பணிக்கு உதவியாக இருக்கும். தேர்தலுக்கு இன்னும் 13 நாட்களே உள்ள நிலை தேர்தல் அலுவலகம் திறக்காமல் தி.மு.க.,வினர் மவுனம் காத்து வருகின்றனர். இதனால் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது என குமுறுகின்றனர்.

