ADDED : மே 19, 2024 06:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி, : தேனி நகராட்சி பெரியகுளம் --- தேனி மெயின் ரோடு தீயணைப்புத்துறை அலுவலகம் அருகே பகிர்மான குழாய் சேதமடைந்து குடிநீர் வீணாக ரோட்டில் செல்கிறது. இப் பகுதியில்ஒருநாள் விட்டு ஒருநாள் வினியோகிக்கப்படும் குடிநீர் பெரும் பகுதி ரோட்டில் ஓடி வீணாகிறது.
குடிநீர் வீணாகும் இடத்திற்கு அருகே நகராட்சி அலுவலகம் உள்ளது. ஆனால் நகராட்சி குடிநீர் பிரிவு அதிகாரிகள்குழாய் உடைப்பை கண்டு கொள்ளாததால் தொடர்ந்து குடிநீர் வீணாகி ரோட்டில்செல்கிறது. நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

