/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குத்தாட்டத்துடன் துவங்கிய தி.மு.க., தேர்தல் பிரசாரம்
/
குத்தாட்டத்துடன் துவங்கிய தி.மு.க., தேர்தல் பிரசாரம்
குத்தாட்டத்துடன் துவங்கிய தி.மு.க., தேர்தல் பிரசாரம்
குத்தாட்டத்துடன் துவங்கிய தி.மு.க., தேர்தல் பிரசாரம்
ADDED : ஏப் 02, 2024 06:20 AM

கம்பம் : கொட்டு மேளத்துடன் குத்தாட்ட கோஸ்டிகளை தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க களம் இறக்கியது. பொதுமக்கள் கூட்டம் கலையாமல் இருக்க இந்த உத்தியை தி.மு.க. கையிலெடுத்துள்ளது.
தேனி லோக்சபா தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது.
தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் சட்டசபை தொகுதி வாரியாக ஆதரவு திரட்டி வருகிறார். நிர்வாகிகளை சந்திப்பதிலும், கவனிப்பதிலும் முன்னணியில் உள்ளார். அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணசாமி பிரசாரத்தில் இறங்கினாலும் கவனிப்பில் தி.மு.க.விற்கு அடுத்த நிலையில் உள்ளார் அ.ம.மு.க. லில் தினகரன் ஒரு சுற்று பிரசாரம் முடித்து விட்டு, மனைவியை களமிறக்கி உள்ளார்.
தி.மு.க வேட்பாளரை ஆதரித்து உதயநிதி, நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரசாரம் செய்துள்ளார். முக்கிய தலைவர்கள் பிரசாரம் இன்னமும் இல்லை.
இந்நிலையில் பிரசாரத்தில் கொட்டு மேளத்துடன் இளம் பெண்கள் கொண்ட குத்தாட்ட கோஷ்டியை தி.மு.க., களம் இறக்கி உள்ளது. வேட்பாளர்கள் பிரசாரத்திற்கு வரும் போது கிராமங்களில் கூட்டம் கலைந்து செல்லாமல் இருக்க இந்த யுக்தியை தி.மு.க. கையில் எடுத்துள்ளது.
மார்க்கையன்கோட்டைக்கு தி.மு.க. வேட்பாளர் வரும் வரை குத்தாட்ட நடனத்தை மக்கள் ஆர்வத்துடன் ரசித்து. வேட்பாளர் வரும் வரை நடந்த குத்தாட்டத்தை ரசித்தனர்.

