/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தி.மு.க., வேட்பாளருக்கு தலைவலி ஏற்படுத்தும்
/
தி.மு.க., வேட்பாளருக்கு தலைவலி ஏற்படுத்தும்
ADDED : ஏப் 06, 2024 05:14 AM
கம்பம் : தி.மு.க. வேட்பாளரின் பிரசாரத்தில் மகளிர் உரிமை தொகை பெரும் தலைவலியாக உருவெடுத்து வருகிறது.
தேனி லோக்சபா தொகுதியில் தேர்தல் பிரசாரம் களை கட்டி வருகிறது. தலைவர்களும் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கின்றனர்.
அ.ம.மு.க வேட்பாளர் தினகரன் தான் எம்.பி. யாக இருந்த போது செய்த பணிகளையும், தனிப்பட்ட முறையில் தான் செய்த காரியங்களையும் கூறி வருகிறார். அ..தி.மு.க. வேட்பாளர் இரட்டை இலை என்ற மந்திர சின்னத்தை கெட்டியாக பிடித்து பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
தி.மு.க., மகளிர் இலவச பஸ் பயணம், காலை உணவு திட்டம், மகளிர் உரிமை தொகை என பேசி தற்போது சிக்கலில் சிக்கி கொண்டனர்.
ஊர் ஊருக்கு பிரசாரத்திற்கு செல்லும் போது பெரும்பாலும் பெண்கள் கூட்டம் தங்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை என கூச்சலிட துவங்கி விட்டனர். தேர்தல் முடிந்தவுடன் சிறப்பு முகாம் நடத்தி கிடைக்காத அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தங்க தமிழ்செல்வன் உறுதி கூறுகிறார்.
கம்பத்தில் பிரசாரம் செய்த கனிமொழி எம்.பி. கூட தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்போம் என கூறினார்.
தி.மு.க. வேட்பாளருக்கு மகளிர் உரிமை தொகை பிரச்னை பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளது.

