/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'அம்ரூத்' திட்டத்தில் குழாய் பதிக்க தோண்டிய தெருக்கள் சீரமைக்காததால் அவதி
/
'அம்ரூத்' திட்டத்தில் குழாய் பதிக்க தோண்டிய தெருக்கள் சீரமைக்காததால் அவதி
'அம்ரூத்' திட்டத்தில் குழாய் பதிக்க தோண்டிய தெருக்கள் சீரமைக்காததால் அவதி
'அம்ரூத்' திட்டத்தில் குழாய் பதிக்க தோண்டிய தெருக்கள் சீரமைக்காததால் அவதி
ADDED : மே 14, 2024 12:37 AM
சின்னமனூர்: அம்ரூத் திட்டத்தின் கீழ் சின்னமனூரில் வீதிகளில் குழாய் பதிக்க தோண்டிய பள்ளங்கள் சீரமைக்காததால் மக்கள் தினமும் பலர் கீழே விழுந்து காயமடைகின்றனர்.
சின்னமனூர் நகராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் விதிகளில் குடிநீர் பைப் பதிக்கும் பணிகள் நடைபெற்றது.
இந்த பணிகளின் போது 19.706 கி.மீ.நீளத்தில் இருந்த 169 தார்சாலைகள் குண்டும் குழியுமாக மாறியது.
இந்த வீதிகளை ரூ.9 கோடியே 60 லட்சத்தில் பராமரிப்பு செய்ய மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.
அதே போல வார்டு 1, 2, 22 மற்றும் 24, பகுதிகளில் 1.985 கி.மீ. நீளத்தில் 9 தார்ச் சாலைகளை பராமரிக்க ரூ.94 லட்சத்திலும், மேலும் வார்டு 18, 19, 24 பகுதிகளில் 2.143 கி.மீ. நீளத்தில் 13 தார்ச் சாலைகள் பராமரிப்பு ஒரு கோடியே 3 லட்சத்திலும், 35 மண் சாலைகளை தார் சாலைகளாக மாற்ற ரூ.2 கோடியே 15 லட்சத்திலும் மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டது.
இதற்கென அரசு ரூ.13.72 கோடியை அனுமதித்துள்ளதாக நகராட்சி தெரிவித்தது. ஆனால் இன்று வரை எந்த வீதியும் பராமரிப்பு செய்யப்படவில்லை.
நகரில் 27 வார்டுகளிலும் மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்த ரூ.11.60 கோடிக்கு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டது. அதுவும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கமிஷனரும், பொறியாளரும் நகரை சுற்றிப் பார்ப்பதே இல்லை. பொதுமக்கள் வீதிகளில் நடக்க முடியாமலும், வாகன போக்குவரத்து செய்ய முடியாத சூழலும் உள்ளது.
நகராட்சிகளின் மண்டல இயக்குநர் சின்னமனூர் நகராட்சிக்கு ஸ்பெஷல் விசிட் செய்து, பொதுமக்களின் குறை தீர்க்க முன்வர வேண்டும்.

