/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரூ.41 லட்சம் செலவில் 557 ஏக்கர் தரிசு நிலம் விளை நிலமாக மாற்றம்
/
ரூ.41 லட்சம் செலவில் 557 ஏக்கர் தரிசு நிலம் விளை நிலமாக மாற்றம்
ரூ.41 லட்சம் செலவில் 557 ஏக்கர் தரிசு நிலம் விளை நிலமாக மாற்றம்
ரூ.41 லட்சம் செலவில் 557 ஏக்கர் தரிசு நிலம் விளை நிலமாக மாற்றம்
ADDED : ஏப் 23, 2024 06:42 AM
தேனி : மாவட்டடத்தில் தரிசு நிலங்களாக இருந்த 557 ஏக்கர் ரூ.41லட்சம் செலவில் மேம்படுத்தி விளைநிலமாக மேம்படுத்தப்பட்டுள்ளது என வேளாண் துறையினர் தெரிவித்தனர்.
தேனி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தில் கிராமங்கள் தேர்வு செய்து அக்கிராமத்தில் உள்ள தரிசு நிலங்கள் விளைநிலங்களாக மேம்படுத்தப்படுகிறது. வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 2021-2022ல் 13 கிராமங்கள், 2022-2023ல் 44 கிராமங்கள், 2023-2024ல் 26 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டன. அங்கு தரிசு நிலங்களை மேம்படுத்த வேளாண், தோட்டக்கலை, வருவாய் உள்ளிட்ட 13 துறைகள் செயல்படுகின்றன. இந்த ஆண்டில்
இத்திட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 557 ஏக்கர் தரிசு நிலம் விளைநிலமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் அடுத்தடுத்துள்ள 10 முதல் 15 ஏக்கர் நிலம் தேர்வு செய்து அந்த நிலத்தை மேம்படுத்தும் பணி செய்யப்பட்டது.
பின் சொட்டு நீர் பாசனம் மூலம் பழ, மரக்கன்றுகள் நடுவு செய்து வளர்க்க படுகின்றது.
மூன்று ஆண்டுகளில் ரூ.41 லட்சம் செலவில் மேம்பாட்டு பணி செய்து 557 ஏக்கர் விளை நிலங்களாக மாற்றப்பட்டுள்ளது.
ஆண்டிப்பட்டி வட்டாரத்தில் 57.35 ஏக்கர், கடமலை மயிலாடும்பாறை 45.45, பெரியகுளம் 20.92, சின்னமனுார் 10.05, உத்தமபாளையம் 19.17, தேனி 30.53 என 164.3 ஏக்கர் நிலம் விளைநிலங்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 392 ஏக்கர் மானாவரி சாகுபடி செய்யும் விளைநிலங்களாக மேம்படுத்தப்பட்டுள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்தனர்.

