/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அனுமதி இன்றி பிரசாரம் அ.ம.மு.க., மீது வழக்கு
/
அனுமதி இன்றி பிரசாரம் அ.ம.மு.க., மீது வழக்கு
ADDED : ஏப் 07, 2024 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி, : தேனி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமி தேர்தல் அலுவலரிடம் அனுமதி பெற்று சங்கராபுரம் பகுதியில் பிரசாரம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அ.ம.மு.க., வை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் தேர்தல் அலுவலர் அனுமதி இன்றி, தேர்தல் விதிகளை மீறி, சட்ட விரோதமாக, மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வாகனத்தில் பிரசாரம் செய்ததாக தேர்தல் பறக்கும் படை அலுவலர் கண்ணன் புகாரில் போடி தாலுகா போலீசார் அ.ம.மு.க., வினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

