/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம்
/
பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம்
ADDED : மார் 24, 2024 05:43 AM

--பெரியகுளம் : பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திர தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
ஆயிரம் ஆண்டு பழமையான இக்கோயில் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 15 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் சிறப்பு பூஜையும், இரவில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடந்தது.
9ம் நாளில் தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சோமாஸ்கந்தர் (ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி,பாலசுப்பிரமணியர்) வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தி.மு.க.,வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், சரவணக்குமார் எம்.எல்.ஏ., தி.மு.க., மாவட்ட அவைத் தலைவர் செல்லப்பாண்டியன், நகராட்சி தலைவர் சுமிதா, பா.ஜ., வர்த்தக அணித்தலைவர் கோபிக்கண்ணன், டாக்டர் முத்துக்குகன் உட்பட ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேர் செல்லும் முன் சிவனடியார்கள் சங்கத் தலைவர் குணசேகரன் தலைமையில் பக்தர்கள் மேளம், தாளத்துடன் சங்கொலி இசைத்து சென்றனர். 'சிவ சிவ, அரோஹரா' கோஷத்துடன் தேர் ஆடி அசைந்து கச்சேரி ரோட்டில் புறப்பட்டு, கீழரதவீதி, தெற்குரத வீதி வழியாக நிலையை அடைந்தது. ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர்கள் சசிதரன், சிதம்பரசூரியவேலு, மண்டக படிதாரர்கள் செய்திருந்தனர்.

