/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி: முட்டை, கறிக்கோழி கொண்டு வர தடை
/
கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி: முட்டை, கறிக்கோழி கொண்டு வர தடை
கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி: முட்டை, கறிக்கோழி கொண்டு வர தடை
கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி: முட்டை, கறிக்கோழி கொண்டு வர தடை
ADDED : ஏப் 23, 2024 06:40 AM
தேனி : கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலியால் தமிழகத்திற்குள் வரும் கறிக்கோழி, முட்டை, தீவனங்கள் கொண்டு வரும் வாகனங்களுக்கு தற்காலிக தடை விதித்துள்ளனர். சோதனை சாவடிகளில் கால்நடை துறை நோய் தடுப்பு பணியினை தீவிரப்படுத்திஉள்ளனர்.
கேரளா ஆலபபுழா மாவட்டத்தில் பண்ணைகளில் வளர்க்கப்பட்ட வாத்து, கோழிகள் தொடர்ச்சியாக இறந்துள்ளது. கால்நடைதுறை அதிகாரிகள் ஆய்வில் பறவை காய்ச்சல் வைரஸ் கிருமி தாக்கி உயிரிழந்தது உறுதியானது.
இதனால் அப்பண்ணைகளில் வளர்ந்த கோழி, வாத்துக்களை உடனடியாக அழிக்கப்பட்டு வருகிறது. இதனால் கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் தேனி மாவட்டம் வழியாக வாகனங்களில் கொண்டு வரப்படும் கோழிகள், வாத்துக்கள், தீவனங்கள் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளன. இவற்றை கண்காணிக்க குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கால்நடைத்துறை இணை இயக்குனர் கோயில்ராஜா கூறியதாவது: தமிழக கேரள எல்லையில் மூன்று இடங்களில் சோதனை சாவடி அமைத்து பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
சோதனை சாவடியில் கால்நடை உதவி டாக்டர் தலைமையில்,ஆய்வாளர், பராமரிப்பு உதவியாளர், கிருமிநாசினி மருந்து தெளிப்பாளர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பணி 24 மணி நேரமும் நடந்து வருகிறது.மாவட்டத்தில் உள்ள பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் கால்நடை துறைக்கு தெரிவிக்க பண்ணை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.
கறிக்கோழி, முட்டை, தீவனங்கள் கொண்டு வரும் வாகனங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.', என்றார்..

