/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நானோ திரவ யூரியா பயன்பாடு விழிப்புணர்வு நடவடிக்ைக தேவை
/
நானோ திரவ யூரியா பயன்பாடு விழிப்புணர்வு நடவடிக்ைக தேவை
நானோ திரவ யூரியா பயன்பாடு விழிப்புணர்வு நடவடிக்ைக தேவை
நானோ திரவ யூரியா பயன்பாடு விழிப்புணர்வு நடவடிக்ைக தேவை
ADDED : ஆக 19, 2024 01:03 AM
கம்பம் : திரவ யூரியா உரங்களை பயன்படுத்த விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேளாண் துறை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
நெல் சாகுபடியில் தழைச் சத்திற்கு என யூரியா உரத்தை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். யூரியாவிற்கு என மத்திய அரசு கோடிக்கணக்கான ரூபாய்களை மானியமாக வழங்கி வருகிறது. எனவே யூரியா பயன்பாட்டை குறைக்கவும், மாற்று வழிகளை பின்பற்றவும் கேட்டுக் கொண்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசின் நிறுவனமான இப்கோ நிறுவனம் நானோ திரவ யூரியாவை அறிமுகம் செய்தது.
திரவ வழி யூரியா பயன்படுத்துவதால் தழைச்சத்து வீணாகாமல் 90 சதவீதம் வரை பயிருக்கு கிடைக்கிறது.
ஒரு மூடை யூரியா பயன்படுத்தும் இடத்தில் அரை லிட்டர் திரவ உரம் போதுமானது. போக்குவரத்து செலவு மிச்சமாகும், எளிதாக கொண்டு செல்ல முடியும்.
தழைச்சத்து வீணாகாமல் பயன்படுத்த முடியும். ஆனால் இது தொடர்பான விழிப்புணர்வு விவசாயிகளிடம் இல்லாததால், திரவ யூரியா பயன்பாடு அதிக அளவில் பயன்பாட்டில் இல்லை.
இதனால் மத்திய அரசின் திட்டம் முழு அளவில் நடைமுறை படுத்தாத நிலை உள்ளது. எனவே விவசாயிகளுக்கு திரவ யூரியா உரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

