/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
3200 மண் மாதிரிகள் சேகரிக்க இலக்கு
/
3200 மண் மாதிரிகள் சேகரிக்க இலக்கு
ADDED : மே 19, 2024 05:28 AM
தேனி : மாவட்டத்தில் 3200 மண் மாதிரிகள் சேகரிக்க வேளாண் அலுவலர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனை மொபைல் செயலியில் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
வேளாண் அதிகாரி கூறியதாவது: பயிர்களின் வளர்ச்சிக்கு மண் பரிசோதனை முக்கியம். அதில் உள்ள சத்துக்களை வைத்து சாகுபடி செய்யும் பயிருக்கு தேவையான உரங்கள் எந்த விகிதத்தில் வழங்க வேண்டும் என கூறலாம்.. மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 24 கிராமங்களில் தலா நுாறு மண் மாதிரிகள் என 2400, மற்ற கிராமங்களில் இருந்து 800 மாதிரிகள் என 3200 மண் மாதிரிகள் எடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் முன்னிலையில் வேளாண் அலுவலர்கள் மண் மாதிரிகளை சேகரிப்பர். சேகரிக்கும் இடத்தில் இருந்தே அதனை 'மண்வள அட்டை' செயலியில் நிலத்தின் சர்வே எண், விவசாயி பெயர், முந்தைய பயிர்சாகுபடி, அடுத்து பயிரிடப்பட உள்ள பயிர் உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும். சேகரிக்கப்பட்ட மண்ணில் மண்வள அட்டையுடன் ஆய்வகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இதன் மூலம் குறிப்பிட்ட பகுதியில் உள்ள மண் தன்மை பற்றி எளிதாக அறிய இயலும். மண்பரிசோதனை செய்ய விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண் அலுவலர்களிடம் நேரடியாக தெரிவிக்கலாம். இதுவரை மாவட்டத்தில் 520 மண்பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. என்றனர்.

