/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மகளிர் உரிமைத் தொகை பிரச்னையை பிரசாரத்தில் பேச அ.தி.மு.க. உத்தரவு
/
மகளிர் உரிமைத் தொகை பிரச்னையை பிரசாரத்தில் பேச அ.தி.மு.க. உத்தரவு
மகளிர் உரிமைத் தொகை பிரச்னையை பிரசாரத்தில் பேச அ.தி.மு.க. உத்தரவு
மகளிர் உரிமைத் தொகை பிரச்னையை பிரசாரத்தில் பேச அ.தி.மு.க. உத்தரவு
ADDED : ஏப் 08, 2024 04:41 AM
கம்பம்: மகளிர் உரிமை தொகை பிரச்னையை பிரசாரத்தில் மையப் பொருளாக பேச அ.தி.மு.க., கட்சி தலைமை தனது வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நட்சத்திர பேச்சாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. ஒவ்வொரு கட்சியும் வெற்றி பெற தேவையான அனைத்து அஸ்திரங்களையும் பயன்படுத்த திட்டமிட்டு காய் நகர்த்தி வருகின்றனர். தமிழக தேர்தல் களத்தில் அனைத்து தொகுதிகளிலும் பரவலாக பேசப்படும் விஷயமாக மகளிர் உரிமைத் தொகை திட்டம் உள்ளது.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில் முதலில் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை என கூறி பின்னர் தகுதியானவர்களுக்கு என்று மாற்றியதால் குறைவான எண்ணிக்கையிலேயே வழங்கப்படுகிறது. தி.மு.க. தரப்பில் ஒரு கோடியே 15 லட்சம் பேர்களுக்கு வழங்குவதாக பிரசாரம் செய்கின்றனர்.
ஒவ்வொரு ஊரிலும் பல பெண்களுக்கு உரிமை தொகை கிடைக்கவில்லை. எனவே தான் தமிழகம் முழுவதும் தி.மு.க. வேட்பாளர்கள் பிரசாரம் செய்யும் இடங்களில் தங்களுக்கு உரிமை தொகை கிடைக்கவில்லை என பெண்கள் கூச்சலிடும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
இந்த பிரச்னையை தி.மு.க. விற்கு எதிராக திருப்பவும், தங்களுக்கு சாதகமாக மாற்றவும் அ.தி.மு.க. தலைமை திட்டமிட்டுள்ளது. இதற்கென தங்கள் கட்சி வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நட்சத்திர பேச்சாளர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளது. அதில் பிரசாரத்தின் போது மகளிர் உரிமை தொகை திட்டத்தில் தி.மு.க. வின் ஏமாற்று வேலை பற்றி விரிவாக பேச அறிவுறுத்தப்பட்டுள்ளது. தலைமையின் உத்தரவை தொடர்ந்து இனி அ.தி.மு.க. பிரசாரத்தில் மகளிர் உரிமை தொகை விவகாரம் பெரிய அளவில் பேசப்படும் என்கின்றனர். அ.தி.மு.க. வின் இந்த உத்தி தேர்தலில் எந்த அளவிற்கு அந்த கட்சிக்கு கை கொடுக்கும் என்பது போகப் போக தெரியும்.

