/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தி.மு.க., ஆட்சியில் ரத்தான திட்டங்கள் பட்டியலிட்டு அ.தி.மு.க., பிரசாரம்

ADDED : ஏப் 01, 2024 06:44 AM
ஆண்டிபட்டி : கடந்த மூன்று ஆண்டு தி.மு.க., ஆட்சியில் காலியான பொதுமக்களுக்கான நலத்திட்டங்களை பட்டியலிட்டு அ.தி.மு.க.,வினர் கிராமங்கள் தோறும் பிரச்சாரம் செய்கின்றனர்.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 படித்த மாணவிகளுக்கு திருமண உதவித் தொகையாக 4 கிராம் தங்கம், ரூ.25 ஆயிரம், பட்டதாரி பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ரூ.50 ஆயிரம் உதவித்தொகை கிடைத்து வந்தது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் இத்திட்டங்கள் ரத்து செய்யப்பட்டது.
பிளஸ் 2 படித்த மாணவ மாணவிகளுக்கு லேப்டாப், சைக்கிள் அ.தி.மு.க., ஆட்சியில் வழங்கப்பட்டது. தற்போது இல்லை.
அம்மா உணவகம், கிராமங்களில் மினி கிளினிக் ஆகியவை மூடப்பட்டது. பெண்களுக்கு அம்மா ஸ்கூட்டர் திட்டம் முடக்கப்பட்டது.
பால் விலை, மின்சார கட்டணம், வீட்டு வரி உயர்வு ஆகியவைகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களை பட்டியலிட்டு' பிட் நோட்டீஸ்' மூலம் கிராமங்களில் அ.தி.மு.க., வினர் வீடு வீடாக பிரசாரம் செய்கின்றனர். அ.தி.மு.க., வின் பிரச்சார உத்தி தி.மு.க., வினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.