/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விரல்களை இழந்து வெறுங்கையில் முழம் போடும் அ.தி.மு.க., : பழனிசாமி தி.மு.க., கொள்கை பரப்பு செயலாளர் லியோனி பிரசாரம்

ADDED : ஏப் 03, 2024 07:11 AM
தேனி : அனைத்து விரல்களையும் இழந்து வெறுங்கையில் அ.தி.மு.க.,பழனிசாமி முழம்போடுகிறார்,' என தேனி அருகே சீலையம்பட்டி, கோட்டூர், முத்துத்தேவன்பட்டி, பழனிசெட்டிபட்டியில் தி.மு.க., கொள்கை பரப்பு செயலாளர் லியோனி பேசினார்.
அவர் பேசியதாவது: தேனியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் ராமராதபுரத்தில் பலாப்பழம் விற்றுக் கொண்டிருக்கிறார். ஒரு மனிதருக்கு வந்த நிலைமையை பார்த்தீர்களா. அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிச்சாமி வெறுங்கையில் முழம்போடுகிறார். எப்படி என்கிறீர்களா அவரது கைவிரல்களில் முன்னாள் முதல்வர் ஜெ., இருந்தார்.
அவர் இன்று இல்லை. இது கட்டைவிரலை இழந்தது போன்று. முதல்வர் பதவி தந்து அழகுபார்த்த சசிகலாவை ஓரங்கட்டினார்.
இது ஆட்காட்டி விரலை இழந்தது போன்று. அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரனை ஆதரிக்கவில்லை. அவரும் அவரிடம் இல்லை. அவர் நடுவிரல். துணை முதல்வராக இருந்து ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் ஆதரவு அளித்த ஓ.பி.எஸ். தற்போது அவரிடம் இல்லை. அவர் மோதிரவிரல், கடைசி வரை ஆதரவளித்த பா.ஜ.,வும் அவருக்கு சாதகமாக இல்லை. ஆகையால் சுண்டு விரலும் இல்லை.
இதனால் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் அனைத்த விரல்களையும் இழந்து வெறுங்கையில் முழம் போடும் ஆளாக சுற்றித்திரிகிறார். அதனால் முதல்வர் ஸ்டாலின் மக்கள் நலத்திட்டங்களை உங்களுக்கு கிடைக்க தங்கத்தமிழ்செல்வன் வெற்றி பெற்ற ஓட்டளியுங்கள்.', என்றார்.