/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அ.தி.மு.க., கொடி தொப்பிகள் பறிமுதல்
/
அ.தி.மு.க., கொடி தொப்பிகள் பறிமுதல்
ADDED : ஏப் 04, 2024 11:47 PM
தேவாரம் : தேவாரம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் 50. இவர் நேற்று வாகனத்தில் தேவாரம் மெயின் ரோட்டில் வந்துள்ளார்.
தேவாரம் போலீஸ் ஸ்டேஷன் அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் பிரேம் ராஜ்குமார் வாகன சோதனையில் ஈடுபட்டார். சோதனையில் தேர்தல் விதி மீறி எவ்வித ஆவணமும் இன்றி ரூ. 27,885 மதிப்பு உள்ள அ.தி.மு.க., கட்சி மப்ளர் 268, தொப்பிகள் 20, தே.மு.தி.க., கொடிகள் 40, எஸ்.டி.பி.ஐ., கட்சி கொடிகள் 21 உட்பட புதிய தமிழகம், புரட்சி பாரம் கட்சி கொடிகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. கட்சி கொடிகளை பறிமுதல் செய்து போலீசாரிடம் பிரேம் ராஜ்குமார் ஒப்படைத்தார். தேவாரம் போலீசார் சீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

