/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கூடுதல் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட சரிபார்ப்பு பணி
/
கூடுதல் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட சரிபார்ப்பு பணி
கூடுதல் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட சரிபார்ப்பு பணி
கூடுதல் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட சரிபார்ப்பு பணி
ADDED : ஏப் 08, 2024 04:56 AM
தேனி : லோக்சபா தேர்தலுக்காக கூடுதலாக கொண்டுவரப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட சரிபார்ப்பு பணி துவங்கியது.
மாவட்டத்தில் உள்ள 1225 ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான ஓட்டுப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு கருவி, வி.வி.,பேட் ஆகியவை மார்ச் 22ல் தாலுகா வாரியாகவும், கூடுதலாக 20 சதவீதம் அனுப்ப பட்டது. ஒவ்வொரு ஓட்டுப்பதிவு இயந்திரத்திலும் 15 வேட்பாளர்கள், ஒரு நோட்டா என 16 பட்டன்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் தேனி லோக்சபா தொகுதியில் 25 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீனா தலைமையில் அரசியில் கட்சியினர் முன்னிலையில் ஓட்டுபதிவு கருவிகள் வைக்கும் அறை திறக்கப்பட்டது. பின்னர் பெங்களூரு பெல் நிறுவன பொறியாளர்கள் முதற்கட்ட பரிசோதனை செய்தனர். சரிபார்ப்பு பணி முடிந்ததும் தாலுகா வாரியாக இயந்திரங்கள் அனுப்ப பட உள்ளன. தேர்தல் தாசில்தார் செந்தில்குமார், கலெக்டர் நேர்முக உதவியாளர் பிரகாஷ், தாசில்தார் சந்திரசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.