/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கூடுதல் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்; தொகுதி வாரியாக அனுப்பி வைப்பு
/
கூடுதல் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்; தொகுதி வாரியாக அனுப்பி வைப்பு
கூடுதல் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்; தொகுதி வாரியாக அனுப்பி வைப்பு
கூடுதல் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்; தொகுதி வாரியாக அனுப்பி வைப்பு
ADDED : ஏப் 09, 2024 12:20 AM
தேனி : தேனி மாவட்ட ஓட்டுச்சாவடிகளுக்கு கூடுதல் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி துவங்கியது.
தேனி லோக்சபா தொகுதியில் 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளில் 1225 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. தேனி தொகுதியில் 25 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனால் ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் இரு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படுகிறது. முதற்கட்டமாக கடந்த வாரம் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பபட்டன. பின் கூடுதல் தேவைக்கு விருதுநகரில் இருந்து ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டன.
இவற்றை பெங்களுரூ பெல் நிறுவன பொறியாளர்கள் சோதனை செய்தனர். தொகுதி வாரியாக கூடுதல் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கணினி குலுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்டன. பின்னர் ஓட்டு பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில், அரசியில் கட்சியினர் முன்னிலையில் திறக்கப்பட்டது. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஸ்கேன் செய்து தொகுதி வாரியாக ஆண்டிப்பட்டி 379, பெரியகுளம் 356, போடி 378, கம்பம் 356 அனுப்பபட்டது.
நிகழ்வில் டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, கலெக்டர் நேர்முக உதவியாளர்கள் ஷீலா(தேர்தல்), பிரகாஷ் (வளர்ச்சி), தேர்தல் தாசில்தார் செந்தில்குமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இருந்தனர்.

